Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக மாறும் கிளாம்பாக்கம்.. ஜிஎஸ்டி சாலையில் மேஜர் மாற்றம்! வண்டலூர்-காட்டாங்கொளத்தூர் வரை பாலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பேருந்து முனையம் உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து முனையம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

Kilambakkam Bus Stand GST Road National Highway Tamil Nadu


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கடந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முழுமையான வசதிகள் செய்து முடிக்கும் முன்பே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக போதிய கடைகள் இல்லை என்பதில் தொடங்கி ஏடிஎம் வசதி கூட இல்ல என்ற புகார் வரை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனினும், நாளடைவில் படிப்படியாக இந்த குறைகளை போக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜிஎஸ்டி சாலையில்: இந்த நிலையில் மேலும் ஒரு குட் நியூசாக ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பேருந்து முனையம் உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்குளத்தூர் வரை முதல் கட்டமாக உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை செல்லும் மாநகர பேருந்துகளை எளிதில் கையாளும் வகையில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சிஎம்.டிஏ முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு: பேருந்து முனையம் உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், தேவையற்ற கால விரையம், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவிக்கிப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 1,100 அரசு பஸ்களும், 550 ஆம்னி பஸ்களும், 600 மாநகர பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

உயர்மட்ட மேம்பாலம்: வார நாட்களில் தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகளும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பயணிகளும் இந்த பஸ் முனையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கம் பஸ் முனையத்தின் மாநகர பஸ் நிலையத்திலிருந்து, ஜி.எஸ்.டி சாலையை கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று 'யு’ வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன. இதனால், தேவையற்ற கால விரையமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரில் ஜிஎஸ்டி சாலையில், வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலத்தை அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இந்த ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும்: இதற்கு தற்காலிக தீர்வாக சென்னை நோக்கி செல்லும் மாநகர பஸ்களை எளிதில் கையாளும் வகையில் தற்போதைய கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்திற்கு எதிரில், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர பஸ்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே ஜிஎஸ்டி சாலையை கடந்து எளிதாக சென்னை செல்ல இயலும்.

மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலின்போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கத்தை நோக்கி வரும் பஸ்கள் வண்டலூர் சந்திப்பு வரை சென்று திரும்புவதை தவிர்த்து, புதிதாக அமைக்கப்படும் பணிகளின் மூலம் எளிதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்றடையவும் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த பணிகள் முடிவுபெறும் போது பாதசாரிகள் ஜிஎஸ்டி சாலையை எளிதாக கடக்கவும் வழிவகை ஏற்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பஸ் நிறுத்தம் இல்லை: தற்போது, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தின் மாநகர பஸ் நிலையத்திற்கு எதிரில், சென்னை நோக்கி செல்லும் சாலையில் எந்தவித பஸ் நிறுத்தமும் அனுமதிக்கப்படாத நிலையில், அரசு பஸ்களோ அல்லது தனியார் பஸ்களோ அங்கு நிறுத்தி பயணிகளை இறக்க எவ்வித அனுமதியும் கிடையாது. அனுமதியற்ற முறையில் அங்கு பயணிகளை இறக்கி விடுவதை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறை மூலமாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பஸ் முனையத்திற்கு எதிரில் ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதை தடுக்கும் வகையிலும், அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்த சாலையில் தேவையான வெள்ளை கோடுகள், எச்சரிக்கும் ஒளிரும் கருவிகள் ஆகியவை தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த பணிகள் முடிவு பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+