வானில் நடந்த அதிசயம்.. நீங்க பார்த்தீங்களா! மிஸ் பண்ணாலும் இன்னொரு வாய்ப்பு இருக்கு
சென்னை: ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்களும் வருவது ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயமாகும். இன்று அந்த அதிசயம் நடந்திருக்கிறது. ஒருவேளை இதை பார்க்க தவறியிருந்தால் உங்களுக்கு இன்னொரு சான்ஸ் இருக்கிறது.
நாம் வசிக்கும் பூமியை பம்பரம் என கற்பனை செய்துக்கொண்டால், பம்பரம் சுற்றும் தரை இருக்கிறதே அதுதான் இந்த விண்வெளி. தரை எவ்வளவு பெருசோ அவ்வளவு பெருசுக்கு விண்வெளி இருக்கிறது. இந்த விண்வெளியில் அடிக்கடி சில அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில் இன்று 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கின்றன.

உண்மையில் ஒரே நேர்க்கோட்டில் கோள்கள் வருவதில்லை. பூமியிருந்து பார்ப்பதற்கு ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை போல தெரிகிறது. இப்படி தெரிவது ஒன்னும் சும்மா காரியமில்லை. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி தெரியுமாம். அந்த வகையில் இன்று இரவு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தலையை எட்டி பார்த்திருக்கின்றன.
இதை பார்க்க start finding அப்ளிகேஷன்களை மொபைலில் டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். மிக முக்கியம், அதில் லொகேஷனை மெட்ராஸ் என்று கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் நட்சத்திரம் இருக்கும் திசையை ஓரளவுக்கு சரியாக பார்க்க முடியும்.
சரி நைட்டு 11 மணிக்கு மேல ஆயிடுச்சி, இன்னைக்கு பாக்க முடியல என்ன செய்யுறதுனு கேட்கிறீங்களா? அதுக்கும் வழி இருக்கு. இந்த கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது, ஒரே நாளில் நடக்கும் நிகழ்வு கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஒரு மாதத்திற்கு முன்னரே கண்களுக்கு தெரிய தொடங்கிவிடும். மெல்ல நகர்ந்து நேர்க்கோட்டில் இன்னைக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. அதனால், இன்னைக்கு தவறவிட்டுவிட்டால் நாளைக்கு தெரியும்.
ஆனா என்ன, நேர்க்கோட்டில் இல்லாமல் கொஞ்சம் சைடு வாங்கி இருக்கும். நாளை மறுநாளும் தெரியும், அப்போது இன்னும் கொஞ்சம் சைடு வாங்கியிருக்கும். எனவே இதனை பார்க்காமல் மிஸ் செய்தவர்கள் நாளை பார்த்துவிடுங்கள்.
சென்னையிலிருந்து பார்க்க முடியுமா?:
முடியும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இல்லாமல் இருந்தால் பார்க்க முடியும். இன்னைக்கு 4 கோள்கள் மட்டுமே தெரிந்ததாக பலரும் சொல்கிறார்கள். எனுவே நாளை பார்க்க விரும்புவோர்கள், சென்னைக்கு பக்கத்தில் ஒளி மாசு குறைவாக இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தால் சூப்பராக தெரியும். சென்னையில் இருக்கிறீர்கள் எனில், காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் ஹைவேயில் ஒரு டிரிப் அடியுங்கள். வேலூர் வரும் அங்கு வைனு பாப்பு விண் ஆய்வகம் இருக்கும். அதற்கு பக்கத்தில் காரை பார்க் செய்துவிட்டு வானத்தை பார்த்தால் கோள்கள் சூப்பராக தெரியும்.
அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பிர்லா கோளரங்கத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கும் நன்றாக தெரியும். இரவிலும், அதிகாலை நேரத்திலும்தான் இது தெரியும் என்பதால் அந்த நேரத்தில் பார்ப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications