130 கிமீ வேகம்! விழுப்புரம் - திருச்சிக்கு பறக்க போகும் ரயில்கள்! தென்மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழகத்தின் முக்கியமான வழித்தடமான விழுப்புரம் - திருச்சி ரூட்டில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் மிகவும் பிசியான ரயில்வே ரூட்டாக சென்னை - திருச்சி, மதுரையை கனெக்ட் செய்யும் வழித்தடத்தை சொல்லலாம். சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி என பல்வேறு ஊர்களுக்கு இந்த ரூட்டில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரூட்களில் பயணம் செய்கிறார்கள்.

130 கிமீ வேகத்தில் இயக்க
வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் இந்த கோர்டு லைன் செக்ஷன் வழித்தடத்தில் விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்கள் வழியாக செல்கின்றன. தமிழகத்தின் வடக்கு, தென் கிழக்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இந்த வழியாக எக்ஸ்பிரஸ், பேசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி ரயில்வே டிவிஷனுக்கு உள்பட்ட பகுதிகளில் இருவழிப்பாதை அமைந்துள்ளது.
இந்த வழித்தடங்கள் வழியாக கேரள உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. 170 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விழுப்புரம் - திருச்சி ரூட்டில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன.
வேகக் கட்டுபாடுகளை அகற்றும் பணிகள்
ஆனால் மற்ற வழித்தடங்களில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரூட்டில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது. கோர்டு லைன் வழித்தடத்தை பொறுத்தவரை பெரிய அளவிலான பாலங்கள், சிறிய பாலங்கள், ரயில்வே லெவல் கிராசிங்குகள், சிக்னல்கள், சுரங்கப்பாதைகள், லூப் லைன்கள் ஆகியவை உள்ளன.
எனவே இதையல்லாம் கருத்தில் கொண்டு இந்த ரூட்டில் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான பணிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. இதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. ரயில் நிலையங்களில், ரயில் வழித்தடங்களில் வேகமாக இயக்க தடையாக உள்ள விஷயங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புள் டிஸ்டண்ட் சிக்னல்கள்
வழக்கமான ரயில் சேவையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக செய்ய வேண்டிய பணி என்னவென்றால், குஷன்களை அதிகப்படுத்தும் ballast பணிகளை செய்வதுதான். அதேபோல, தண்டவாளத்தில் வளைவுகள் இருந்தால் அதை சீர் செய்வதும் மற்றொரு முக்கிய பணியாகும். இந்த வளைவுகள் குறைக்கப்படும் பட்சத்தில், ரயில்களின் வேகத்தை 130 கிலோ மீட்டர் வகை அதிகரிக்க முடியும்.
தண்டவாளங்களில் அதிக அளவில் அத்துமீறி கடக்க கூடிய பகுதிகளை கண்டறிந்து வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட உள்ளது. விழுப்புரம் விருதாச்சலம் வழித்தடத்தில், புள் டிஸ்டண்ட் சிக்னல்கள் அமைக்கும் பணி முடிவு பெறும் தருவாயில் உள்ளது. விருதாச்சலம சிலக்குடி மற்றும் சிலக்குடி டூ திருச்சி வரையிலான ரூட்டில் டபுள் டிஸ்டண்ட் சிக்னல்கள் நிறுவப்பட உள்ளது. டபுள் டிஸ்ண்டண்ட் சிக்னல்கள் நிறுவததன் மூலம் ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க முடியும்.
விழுப்புரம் - திருச்சி பிஜி செக்ஷன்
இந்த மொத்த பணிகளும் அடுத்த நிதி ஆண்டில் முடிக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது. இதன்பிறகு இந்த ரூட்டில் ரயில்களின் வேகம் 130 கிமீட்டர் வரை அதிகரிக்கப்படும். இதன்மூலம் பயண நேரம் கணிசமாக மிச்சமாகும். விழுப்புரம் - திருச்சி பிஜி செக்ஷனில் தற்போது 100 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், பேசஞ்சர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் மிகவும் பிசியான ரூட்டாக இதுதான் உள்ளது. வந்தே பாரத், அனந்தபுரி, வைகை , பாண்டியன் பல்லவன், ராக்போர்ட், ஹவ்ரா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications