இலவசம்..சென்னையில் துவங்கிய பிளாஸ்மா கண்காட்சி! 7ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி..நல்ல வாய்ப்பு
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உயர் தொழில்நுட்ப பிளாஸ்மா அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வரும் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
தமிழக அரசின் தன்னாட்சி நிறுவனமாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. 1983ம் ஆண்டு நிறுவப்பட்டு இம்மையத்தின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் செயல்பட்டு வருகிறார்.

அதன்படி தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்பட்டு வருகிறார். இந்த மையத்தின் முக்கிய நோக்கம் என்பது பொதுமக்கள் குறிப்பாக மாணவச் சமுதாயத்தினரிடையே அறிவியல் தொழில்நுட்ப விழிப்புணர்வை உருவாக்குவது தான்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமானது சென்னையில் பிஎம்பிர்லா கோளரங்கத்துடன் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தையும், திருச்சிராப்பள்ளியில் அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தையும், வேலூரில் மாவட்ட அறிவியல் மையத்தையும், கோயம்புத்தூரில் மண்டல அறிவியல் மையங்களையும் கொண்டுள்ளது.

இதில் 1988ம் ஆண்டு சென்னையில் பிஎம் பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்டது. 1990ல் சென்னையில் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடங்களைக் கொண்டு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டது. அதன்பிறகு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்மா கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம், குஜராத் மற்றும் மத்திய அரசின் அணுசக்தி துறையைச் சார்ந்த இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனம், கல்பாக்கம் ஆகியன இணைந்து ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 7 ம் தேதி வரை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக பிளாஸ்மா கண்காட்சி நடத்த திட்டமிட்டது.
இந்தக் கண்காட்சியில் பிளாஸ்மா பற்றிய அறிவியல் செய்முறை விளக்கங்கள். ஆசிரியர்களுக்கு பிளாஸ்மா பற்றிய பயிற்சிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உரையாடல்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி நேற்று பிளாஸ்மா கண்காட்சி நேற்று துவங்கியது. சென்னை ஐஐடியின் டீன் நிலேஷ் ஜே வாசா, தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பிளாஸ்மா கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் கல்பாக்கம் ஐசிசிஏஆர் மற்றும் எஸ்க்யூஆர்எம்ஜியின் Head RESD டாக்டர் சுப்பிரமணியன், குஜராத் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனவத்தின் Head Outreach Division டாக்டர் ரவிக்குமார் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இலெனின் தமிழ்க்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இந்தக் கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications