"ராஜா சார்.. உங்களை பார்த்து ரொம்ப நாளாகுது, தீர்க்காயுசா இருக்கணும்".. பாட்டு பாடி வாழ்த்திய சித்ரா
இளையராஜாவுக்கு சித்ரா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், சின்னக்குயில் சித்ராவும் ஒரு பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்...!
ஆரம்ப காலம் தொட்டு இப்போது வரை, பின்னணி பாடகி சித்ராவின் இசை வாழ்க்கையில் முழுமையாக நீக்கமற நிறைந்திருக்கும் ஆஸ்தான குரு இளையராஜான்.. 'நீதானா அந்தக் குயில்' படத்தில் 'பூஜைக்கேத்த பூவிது' பாடலை முதன்முதலில் பாடினார் சித்ரா..
ஆனால், அந்த படம் வெளியாவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பாகவே 'பூவே பூச்சூடவா' படம் வெளியாகிவிட்டது.. அந்த படத்துக்கும் இசையமைத்த இளையராஜாவின் இசையில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. இதுவே சித்ராவின் சின்னக்குயில் என்ற அடையாளமுமாகி, இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருகிறது.

விருதுகள்
சித்ராவின் முதல் தேசிய விருதுக்கு காரணமும் இளையராஜாதான்.. 'சிந்து பைரவி' படத்தில் 'பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' ஆகிய பாடல்களைப் பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றெடுத்தார் சித்ரா.. இப்படி சித்ராவின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் இளையராஜா பெரும் காரணியாக இருந்து வந்துள்ளார்.

இளையராஜா
எப்போது இசையை பற்றி பேசினாலும், அல்லது தன்னை பற்றின பேச்சு என்றாலும், அது இளையராஜாவை பற்றி சொல்லலாமல் சித்ரா இருந்தது இல்லை.. ஒவ்வொரு வருடத்திற்கும் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லவும் மறந்ததில்லை.. ஆனால், கடந்த வருடம் லாக்டவுன் அமலில் இருந்ததால், ட்வீட் போட்டு பாட்டு பாடி பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.

குடும்பம்
அப்போது, "ராஜா சார், ஒரு குறையும் இல்லாமல், நல்ல ஆயுள், ஆரோக்கிய, சவுக்கியத்துடன் சீரும் சிறப்புமாய் நமக்கு நல்ல இசையை வழங்கி குடும்பத்துடன் நலமாய் இருக்க வேண்டும்" என்று தெரிவித்து, "பெரிய வீட்டு பண்ணைக்காரன் படத்தில் இருந்து மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ".. பாடலை பாடியிருந்தார்.

வாழ்த்து
இந்த முறை பிறந்த நாளின்போதும் லாக்டவுன் அமலில் உள்ளதால், இப்போதும் அதேபோல பாட்டு பாடி வாழ்த்து சொல்லி உள்ளார் சித்ரா.. அந்த வாழ்த்தில் சித்ரா சொன்னதாவது: "இன்னைக்கு இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்.. சார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நீங்க எனக்கு குருவா, அப்பா ஸ்தானத்தில் இருந்து அறிவுரைகள் தந்து என்னை வழிநடத்துனீங்க.. உங்களை பார்த்து ரொம்ப நாளாகுது.. இந்த கோவிட் காரணமாக ஒருத்தருக்கொருத்தர் யாரும் பார்த்துக்கவே முடியல..

இசை பயணம்
இந்த ஒரு தருணத்தில் உங்களுக்கு தீர்க்காசியும், ஆயுளும், நல்லிசையும் எல்லாம் கடவுள் அள்ளி கொடுக்கணும்ன்னு நானும் வேண்டிக்கிறேன்.. உங்களின் இசை பயணம் இன்னும் 100 வருஷத்துக்கு வெற்றி பயணமாக அமையணும் என்று உங்களுக்காக வேண்டிக்கிறேன் சார். உங்களிடம் நான் பாடிய ஒரு பாட்டை உங்களுக்காக நான் டெடிகேட் பண்றேன்.." என்று சொல்லி அந்த பாடலையும் சித்ரா பாடினார். கிழக்கு வாசல் என்ற படத்தில் இருந்து, வந்ததே குங்குமம் என்ற பாட்டை 4 வரிகள் பாடினார். இளைரயாஜாவுக்காக சித்ரா பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications