பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்! ‘பூங்கதவே தாழ்திறவாய்’.. மறக்க முடியுமா?
சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். "பூங்கதவே தாழ் விறவாய்.." உள்ளிட்ட ஏராளமான சிறந்த பாடல்களை பாடியவர் உமா ரமணன்.
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த ராகம் கேட்கும் காலம்..' 'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ்திறவாய்' பாடல்கள் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்தவர் உமா ரமணன். 'ஆகாய வெண்ணிலாவே..', 'நீ பாதி நான் பாதி..', 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இளையராஜா இசையில் பாடியுள்ளார் உமா ரமணன்.

எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் பாடல்களை பாடியுள்ளார் உமா ரமணன். விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு.." பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். அதன் பிறகு பாடல் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக் கச்சேரிகளில் கணவர் ரமணன் உடன் இணைந்து பாடி வந்தார் உமா ரமணன்.
உமா ரமணனின் கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ள ரமணன், சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் ரமணன்.

சென்னை அடையாறில் வசித்து வந்தார் உமா ரமணன். கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றி இருந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார் உமா ரமணன். அவருக்கு வயது 69. உமா ரமணனின் மறைவால், இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உமா ரமணைன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நாளை மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications