பின்னணி பாடகர் வேல்முருகன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.. விருகம்பாக்கத்தில் இரவு நடந்தது என்ன?
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று மெட்ரோ ரயில் நிலைய உதவி மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே பேரிகார்டு போட்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு, இந்த வழியில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் செல்லக் கூடாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன், வடிவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி மேலாளர் வடிவேலு புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் பின்னணி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் திருச்சி செல்வதற்காக வேல்முருகன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமாக எல்லா பயணிகளையும் போல், வேல்முருகனை சோதனை செய்தார்களாம்.
ஆனால் வேல்முருகனோ மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டாராம். மதுர குலுங்க குலுங்க என்ற பாடல் மூலம் வேல்முருகன் பின்னணி பாடகராக அறிமுகமானார். அந்த பாடல் இன்றும் கோவில் திருவிழாக்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.
வேல்முருகனின் குரல் கனீர் என இருக்கும் என்பதால் அவர் பாடும் பாடல்கள் ஹிட்டடிக்கும். இந்த பாடலை தொடர்ந்து நாடோடிகள், ஆடுகளம், காஞ்சனா போன்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது மனைவியுடன் ஜோடியாக கலந்து கொண்டார் வேல்முருகன்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications