டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி மனு.. தமிழக அரசு vs அமலாக்கதுறை வாதங்கள்.. ஐகோர்டில் என்ன நடந்தது?
சென்னை: தமிழகத்தில் 28 மணல் குவாரிகளில், அனுமதியின்றி 987 ஹெக்டேர் பரப்புக்கு சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மணலின் மதிப்பு சுமார் 4 ஆயிரத்து 730 கோடி ஆகும். இந்த மோசடி தொடர்பாக டிஜிபி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வைத்த வாதங்கள் என்ன.. நீதிமன்றம் எழுப்பிய கேள்வி என்ன என்பதை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி அவர் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல்காரர்கள் அவரை கொலை செய்தார்கள். இந்த வழக்கின் அடிப்படையிலும், மேலும் 3 மணல் கடத்தல் வழக்குகளின் அடிப்படையிலும், மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியது.

அப்போது, ஒப்பந்ததாரர்களின் வங்கிக்கணக்குகளையும், இயந்திரங்களை முடக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் விசாரணையை ரத்து செய்தது. அதேநேரம் தாங்கள் நடத்திய விசாரணையின்போது, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடந்த 2024-ம் ஆண்டு கடிதம் அனுப்பி இருந்தது.
தமிழ்நாடு டி.ஜி.பி. எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "அமலாக்கத்துறை மணல் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தியது. இதில் 28 மணல் குவாரிகளில், அனுமதியின்றி 987 ஹெக்டேர் பரப்புக்கு சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த மணலின் மதிப்பு சுமார் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் ஆகும். ஆனால், வெறும் 36 கோடியே 45 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டதன் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் 15 மணல் நிறுவனங்களின் 130 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.. இந்த முடக்கத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மாநில போலீசார் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
அதனால், மணல் கொள்ளை தொடர்பாக 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, "அமலாக்கத்துறை என்பது ஒரு புலனாய்வு அமைப்பு. அப்படிப்பட்ட ஒரு புலனாய்வு அமைப்பு, மற்றொரு புலனாய்வு அமைப்பான மாநில அரசுக்கு அதுபோல ஆவணங்களை அனுப்பி வழக்கு தொடர வேண்டும் என்று கேட்க முடியுமா? வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய முடியுமா? என்று கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு அமலாக்க துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் வாதிடுகையில் "இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதன்படிதான், டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது" என்று கூறினார்.
குஜராத்தில் அதிகம்
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், "தகவல்களை அனுப்பி வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்ள மாநில போலீசார் 'போஸ்ட் மாஸ்டர்' அல்ல. உத்தரபிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் தமிழகத்தை விட 4 மடங்கு அதிக அளவில் மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுப்பது இல்லை. மாறாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டுமே அமலாக்கத் துறையின் கண்களுக்கு தெரிகிறது" என்று வாதிட்டார்.
அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வக்கீல், "பொதுநலன் கருதியே இந்த மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது' என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல், ''அதே பொதுநலனை சுட்டிக்காட்டி குஜராத் ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர முடியுமா? என்று கேள்வி கேட்டார்.
அத்துடன் இதே கோரிக்கையுடன் டெல்லி போலீசாருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அப்போது, எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதும், வழக்கை அமலாக்கத்துறை வாபஸ் பெற்று விட்டது'' என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கிற்கு 3 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications