"செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறு.. பதவிநீக்கம் செய்யணும்!" சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பலரும் புகார் அளித்தனர். அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. பல மணி நேரம் அந்த ரெய்டு நீடித்த நிலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி: இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சிறைக்கு மாற்றப்பட்டார். இடையில் அவர் ஜாமீன் கோரி பல முறை முயன்ற போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ச்சியாகச் சிறையிலேயே இருந்து வருகிறார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த செப். 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், அதேநேரம் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிக்கத் தான் வேண்டுமா என்பதே முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
மேல்முறையீடு: இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தார்மீக காரணங்களால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரக் கூடாது என்று ஆளுநர் ரவி எழுதிய கடிதம் திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்தும் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் எம் எல் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மேல்முறையீட்டை செய்திருந்தார்.
முன்னதாக சென்னை ஐகோர்ட், "அரசியலமைப்புச் சட்டமோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமோ ஒருவர் காவலில் இருந்தால் அல்லது அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டாலே அவரை தகுதி நீக்கம் செய்வதாகக் கூறவில்லை" என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்து கடந்த ஜூன் 29இல் எழுதிய கடிதத்தை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உதவாது: இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அது சரியா என மனுதாரர் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் இது எதற்கும் உதவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவலில் உள்ள அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யச் சட்டம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது சரியானது இல்லை என்றும், இதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றும் வரையில் தற்காலிக தீர்வை நீதிமன்றம் தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications