தேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத ரஜினி.. அமைதியே முக்கியம் என பேட்டி!
தேர்தல் குறித்து கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல், வாழ்க்கையில் அமைதியே முக்கியம் என்று பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: தேர்தல் குறித்து கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல், வாழ்க்கையில் அமைதியே முக்கியம் என்று பேட்டி அளித்து இருக்கிறார்.
பரமஹம்ச யோகானந்தர் குறித்த 'ஒரு யோகியின் சுயசரிதம்', ஒலி வடிவ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இதில் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர் இந்த விழாவில் பேசினார்.

என்ன பேசினார்
ரஜினிகாந்த் தனது பேச்சில், பரமஹம்ச யோகானந்தரின் கருத்துக்களை அனைவரும் பின்பற்றி, வாழ்வில் அமைதி பெற வேண்டும். அவரின் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கை நன்மையை நோக்கி செல்லும். அனைவரும் நம்பிக்கையோடும், பக்தியோடும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே பின்பற்ற வேண்டும்.

கோபம் குறைய வேண்டும்
மக்களின் வாழ்க்கையில் கோபம் குறைய வேண்டும். கோபம் குறைந்தால் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது. மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அனைவரும் அப்போதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும். இந்த புத்தகம் மக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் வல்லமை கொண்டது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

பேட்டியளித்தார்
இதையடுத்து விழா முடிந்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவரிடம் பல அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதே போல் தேர்தல் தொடர்பான கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் எதற்கும் பதில் அளிக்கவில்லை.

என்ன கூறினார்
அதற்கு பதிலாக ரஜினிகாந்த், பரமஹம்ச யோகானந்தரின் ஆடியோ புத்தகத்தை கேட்டு, அனைவரும் பயனடைய வேண்டும். அமைதிதான் முக்கியம். மக்கள் இந்த புத்தகத்தை படித்துவிட்டு அமைதியை நோக்கி செல்ல வேண்டு என்று கூறிவிட்டு காரில் ரஜினிகாந்த் ஏறி சென்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications