ராஜேந்திர பாலாஜியை இப்படி சொல்லிட்டாரே நாஞ்சில் சம்பத்.. பட்டாக்கத்தி மாணவர்கள் பற்றியும்தான்
Recommended Video

சென்னை: பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஏதாவது ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் வடசென்னை புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் கூறினார்
நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் வடசென்னை புத்தகத் திருவிழா சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தங்கம் திருமண மாளிகையில் புத்தகத் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஐந்தாயிரம் தலைப்புகளில் ஐந்து லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இதில் மூன்றாவது நாளான இன்று வடசென்னை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் சிறப்புரை ஆற்றினார்.
இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த நாஞ்சில் சம்பத் " அதிமுக ஒரு எஃகு கோட்டை என்றும் திமுக ஒரு கண்ணாடி கோட்டை என்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய கேள்விக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏதாவது ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து நாஞ்சில் சம்பத் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகம் எடுப்பதற்கு பதிலாக கத்தி எடுப்பது நம்முடைய கலாச்சாரத்தின் வேர் அழுகி கொண்டு இருப்பது இது ஒரு அடையாளம். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இந்த பாவத்தை செய்திருப்பார்கள் என்ற செய்தி வந்த பிறகு நெஞ்சு உடைந்துபோனது.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பயிற்சி வகுப்புகள் ஒழுக்கங்களின் மேன்மையும் சொல்லிக் கொடுப்பதற்கு தனி வகுப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தால் மட்டுமே இனிமேல் கல்லூரி மாணவர்களை மீட்க முடியும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் தனியார்மய மக்களும் நவீனமயமாக்கல் வந்ததற்கு பிறகு இப்படி எல்லாம் வரும் என்பதற்கு சிந்தனையாளர்கள் அன்றைய தினமே யூகித்தார்கள். செல்லரித்துக் கொண்டிருக்கிறது இந்த நாடு, சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் மூன்று லட்சத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் வாகை சூடுவார். வரலாறு படைப்பார்" இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications