ப்ளீஸ் சார், எனக்கு யாருமே இல்லை.. நீங்கதான் எல்லாம்" மாணவன் வரைந்த அந்த ஒரு படம்.. உருகும் இணையம்
சென்னை: பள்ளி தேர்வு என்றாலே மாணவர்களுக்கு டென்ஷனும், படபடப்பும்தான்.. அதிலும் அந்த தேர்வு எழுதும்
ஹால்தான் மாணவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் களம்.. ஆனால், சில நேரங்களில் அது உணர்ச்சி குவியலாகவும் மாறிவிடுவதுண்டு.. இப்போது தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு செய்தி, சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தையும் அதே சமயம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்ற கனவோடு, லட்சக்கணக்கில் பணம் செலவழித்துத் தரமான கல்லூரிகளில் சேர்க்கிறார்கள்.

ஆனால், சில மாணவர்கள் பெற்றேரின் தியாகத்தை புரிந்துகொள்ளாமல், வாழ்க்கை பற்றின சீரியஸ்தன்மையும் இல்லாமல் செல்போன் போன், ரீல்ஸ், விளையாட்டு என நேரத்தை வீணடித்து வருகின்றனர்.. இதன் விளைவு, தேர்வு அறைக்குள் நுழையும்போதுதான் அவர்களுக்குத் தெரிய வருகிறது.. தெலுங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற இன்டர்மீடியட் (Intermediate) தேர்வுகளிலும் இதுதான் எதிரொலித்துள்ளது..
விடைத்தாளில் இருந்த அதிர்ச்சி வாசகங்கள்
தேர்வு முடிந்து இப்போது விடைத்தாள்களைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. ஐதராபாத்தில் உள்ள ஒரு மதிப்பீட்டு மையத்தில், ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவரின் விடைத்தாளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.. அந்த மாணவர் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் எழுதுவதற்குப் பதிலாக, பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் சில வரிகளை எழுதியிருந்தார்..
அந்தப் பதில் தாளில், "சார்... எனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை.. நீங்கள்தான் எனக்கு இப்போது எல்லாம்.. தயவு செய்து என்னை இந்தத் தேர்வில் பாஸ் பண்ணுங்கள்.. நான் படித்தது எதுவுமே தேர்வில் வரவில்லை.. நீங்கள்தான் என் கடவுள்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்..
ஓவியமாக மாறிய ஏக்கம்
வெறும் எழுத்துக்களோடு மட்டும் அந்த மாணவர் நிறுத்தவில்லை.. விடைத்தாளின் ஒரு ஓரத்தில், ஒரு மாணவன் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்குவது போன்ற ஒரு உருவத்தையும் வரைந்திருந்தார்.. அந்த படத்தில் விழுந்து கிடக்கும் மாணவனுக்கு அருகில் "நான்" என்றும், நின்றுகொண்டிருக்கும் ஆசிரியருக்கு அருகில் "சார்" என்றும் குறிப்பிட்டு தனது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தார்..
வைரலாகும் போட்டோ
இந்த விடைத்தாளின் போட்டோதான் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.. இந்த சம்பவத்தைப் பார்க்கும் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.. "ஒரு மாணவர் தன் வாழ்க்கையின் இக்கட்டான நிலையில் இப்படி ஆசிரியரிடம் கெஞ்சுவது வேதனையாக இருக்கிறது" என்று ஒரு தரப்பினரும், "படிக்காமல் இப்படி உணர்ச்சிகளை வைத்து மதிப்பெண் பெறுவது முறையல்ல" என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்..
எனினும், கல்வி என்பது ஒருவரின் அறிவை வளர்ப்பதோடு, ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தர வேண்டும்.. இந்த மாணவரின் செயல் அவரது தனிப்பட்ட துயரத்தைக் காட்டினாலும், தேர்வு முறைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் இது பிரதிபலிக்கிறது என்பதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டி உள்ளது.
ஆசிரியர்கள் வெறும் மதிப்பெண் போடுபவர்கள் மட்டுமல்ல, அந்த மாணவனுக்குச் சரியான வழிகாட்டலை வழங்க வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது..!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications