பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.. அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா பரபரப்பு!
Recommended Video

சென்னை: பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக கூட்டணி தலைவர்கள் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

என்ன பேசினார்
இந்த நிலையில் பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா, நாங்கள் மெகா கூட்டணி அமைத்து இருக்கிறோம். இப்போதுதான் பொங்கலுக்கு அதிமுக சார்பாக ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது. அதிமுக தொடர்ச்சியாக நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தது.

எப்படி
கடந்த ஐந்து வருடத்தில் பாஜக ஆட்சி மிகவும் நிலையாக இருந்தது. நாடும் பாதுகாப்பாக இருந்தது. பிரதமர் மோடியால் மட்டும்தான் நிலையான ஆட்சியை உருவாக்க முடியும். இவர்களை நீங்கள் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லதாக இருக்கும்.

பெண்கள் தாய்க்குலம்
பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்க கூடிய கூட்டணி இந்த அதிமுக கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

கூட்டணி எப்படி
உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும் என்று பிரேமலதா பேசி இருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications