நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி
சென்னை: நடுத்தரக் குடும்பங்கள் முதல் சிறு தொழில் செய்பவர்கள் வரை, அவசரப் பணத்தேவை என்று வரும்போது முதலில் நாடுவது நகைக் கடனைத்தான். ஆனால், அப்படிக் கடன் வாங்கும்போது, "இந்தத் தொகை எனது வங்கிக் கணக்கிற்கு வந்தால் வருமான வரித் துறை கேள்வி கேட்குமா?" அல்லது "இதற்கு வரி கட்ட வேண்டுமா?" என்ற பீதி பலருக்கும் இருக்கத்ததான் செய்கிறது.. நகைக் கடன் மற்றும் வருமான வரி தொடர்பாகச் சாதாரண மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தெளிவான விளக்கங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது நகைக் கடன் பெறுவது எளிது என்பதாலும், வட்டி விகிதம் ஓரளவு குறைவாக இருப்பதால்தான் பலரும் தங்க நகைகளை அடகு வைத்துப் பணம் பெறுகிறார்கள்.

இங்கே பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், நீங்கள் வாங்கும் நகைக் கடன் தொகை உங்களின் வருமானமாக கருதப்படாது. பொதுவாக, ஒருவர் சம்பளம் மூலமாகவோ, தொழில் மூலமாகவோ அல்லது சொத்துக்களை விற்பதன் மூலமாகவோ ஈட்டும் பணத்திற்குத்தான் வரி விதிக்கப்படும்.
நகைக்கடன் - அடமானம்
ஆனால், நகைக் கடன் என்பது நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தை அடமானமாக வைத்துத் தற்காலிகமாகப் பெறும் ஒரு கடன் மட்டுமே. இது உங்களின் கைக்கு வரும்போது அது வருமானம் கிடையது.. அது ஜஸ்ட் ஒரு பொறுப்பு மட்டுமே.. அதனால் நகைக் கடன் வாங்கும் தொகைக்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரித் துறையும் இத்தொகையை உங்கள் ஆண்டு வருமானத்துடன் சேர்த்துக் கணக்கிடாது.
அடுத்ததாக, அந்த கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டி குறித்த விதியையும் தெரிந்துகொள்வது அவசியம். வங்கியில் கடன் வாங்கினால் அதற்குக் கட்டும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்குமா என்று கேட்டால், அதற்கு அந்த பணத்தை நீங்கள் எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் பதில்.
தங்க நகைகள் அடமானம்
நீங்கள் வாங்கிய நகைக் கடனை உங்களது சொந்தத் தேவைக்காகவோ அதாவது வீட்டு விசேஷங்கள், மருத்துவ செலவுகள் அல்லது கல்விச் செலவுகளுக்காக பயன்படுத்தினால், நீங்கள் செலுத்தும் வட்டிக்கு எந்தவிதமான வரிச் சலுகையும் அல்லது விலக்கும் கிடைக்காது.
ஆனால், அதே நகைக் கடனை வாங்கி, அந்த பணத்தை உங்கள் தொழில் அல்லது பிசினஸ் வளர்ச்சிக்காக முதலீடு செய்தால், அதற்குச் செலுத்தும் வட்டித் தொகையை உங்கள் வியாபாரச் செலவாக காட்ட முடியும். இதன் மூலம் உங்கள் லாபத்தில் இருந்து வட்டி தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள லாபத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. அதாவது, தொழில் பயன்பாட்டிற்கு மட்டுமே வட்டி கழிவு என்ற சலுகை பொருந்தும்.
வருமான வரி - சலுகைகள்
இருந்தாலும் மக்கள் ஒரு விஷயத்தில் அலர்ட்டாக இருக்க வேண்டும். நீங்கள் அடகு வைக்கும் நகை உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு வாங்கியதாக இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்கள் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் என்று கணக்குக் காட்டிவிட்டு, திடீரென ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அடகு வைத்தால், "அந்தத் தங்கம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்ற கேள்வியை வருமான வரித் துறை எழுப்ப வாய்ப்புள்ளது. அதனால் முறையான வருமானத்தில் வாங்கப்பட்ட நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
நகைக் கடன்
அதேபோல், பெரிய தொகையைக் கடனாகப் பெறும்போது, அதை ரொக்கமாக வாங்காமல் உங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகப் பெறுவது (Bank Transfer) வருங்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பாதுகாக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், அவசரத் தேவைக்கு நகைக் கடன் வாங்குவது உங்களின் வரிப் பொறுப்பை அதிகரிக்காது. அது வருமானம் இல்லாததால் வரி கட்டத் தேவையில்லை. ஆனால், அந்தப் பணத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே வட்டிச் சலுகைகள் அமையும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்...!!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications