பிளஸ் 2 ரிசல்ட் ஆல் பாஸ் : 600க்கு 600 மார்க் யாருமில்லை - தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். 600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் பெறவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மதிப்பெண் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 8 லட்சம் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் முதன்முறையாக தசம ஸ்தானத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களில் யாரும் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றன. வழக்கமாக மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும்.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2வில் 100 சதவிகிதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வராத எந்த தேர்வும் எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
மதிப்பெண்கள் பட்டியலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

மதிப்பெண்கள் எவ்வளவு
600க்கு 600 மதிப்பெண்கள் யாருமே பெறவில்லை. 30600 மாணவர்கள் 551 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 501 மதிப்பெண்கள் முதல் 550 மதிப்பெண்கள் வரைக்கு 1,67,133 மாணவர்கள் பெற்றுள்ளனர். 451 முதல் 500 வரைக்கும் 2,22,522 மாணவர்கள் வரைக்கும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 400 முதல் 450 வரை 2,08,015 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போல 351 முதல் 400 வரைக்கும் 1,19,519 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தசம எண்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்பதுபோல முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதைத் தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு உதவி
பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.29 என்று வந்தால் அது முழு மதிப்பெண்ணாக 79 என மாற்றப்படாமல் 78.29 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்தப் புதிய நடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட் ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பெண்கள் பதிவிறக்கம்
www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications