ப்ளஸ் 2 மாணவர்களே உடனே இ-மெயில் ஓப்பன் பண்ணிடுங்க.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.. காரணம் இதுதான்
சென்னை: தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், அதாவது 2023-2024 ம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்று மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், அடுத்ததாக கல்லூரிகளில் சேருவதற்கு பெரும்பாலும் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக கல்லூரிகளில் அட்மிசன் தொடர்பான விவரங்கள், ஆலோசனைகள் என அனைத்தும் மின்னஞ்சல் மூலமாகவே மாணவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாணவருக்கு மின்னஞ்ல் முகவரி என்பது கட்டாயமாக தேவைப்படுகிறது.
எனவே அதற்கு முன்னேற்பாடாகவும், மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். தங்களது வகுப்பாசிரியர்கள் உதவியோடு மாணவர்கள் இந்த மின்னஞ்சல் கணக்கை உருவாக்க வேண்டும். மேலும் மின்னஞ்சலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க வேண்டும். இதன் பின்னர் மாணவர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து [email protected] என்ற முகவரிக்கு "நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்" என்றும், "உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன" என்ற விவரத்தையும் அந்த மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications