Plus Two: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதப் போறீங்களா? இன்று ஹால் டிக்கெட் ரிலீஸ்.. முழு விவரம் இதோ!
சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் தங்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியானது. +2 பொதுத்தேர்வை 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 3,73,178 மாணவர்களும், 4,19,316 மாணவிகளும் அடங்குவார்கள்.

பிளஸ் 2 ரிசல்ட்
இந்த தேர்வில் 3,47,670 மாணவர்களும், 4,05,472 மாணவிகள் என மொத்தம் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றனர். 39,352 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். மேலும், 10,049 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதாத மற்றும், தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டது.
ஜூன் 25 ஆம் தேதி தொடங்கி ஜூலை 2 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் +2 துணைத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று முதல்
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான (தட்கல் உட்பட) ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 19) மதியம் வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல, செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் HALL TICKET என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE JULY 2025 HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும்.
உடனே தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
துணைத்தேர்வு அட்டவணை
ஜூன் 25 - தமிழ்,
ஜூன் 26 - ஆங்கிலம்,
ஜூன் 27 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது),
ஜூன் 28 - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்,
ஜூன் 30 - வேதியியல், கணக்கியல், புவியியல்,
ஜூலை 1 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை,
ஜூலை 2 - இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications