+2 ஃபெயில் ஆன மாணவர்கள் துணைத்தேர்வு எழுத ரெடியா? வெளியானது ஹால் டிக்கெட்! டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. +2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியாகின. பிளஸ் 2 தேர்வு எழுதிய 7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 துணைத் தேர்வு: இந்த தேர்வில் தேர்ச்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. துணைத் தேர்வு எழுத, மாணவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் துணைத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?: தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தோன்றும் "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/ JULY 2024 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிராக்டிக்கல் தேர்வு: செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித் தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கால அட்டவணை: ஜூன்/ ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வு கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
துணைத் தேர்வு நடைபெறும் கால அட்டவணை:
ஜூன் 24ஆம் தேதி : மொழிப்பாடத் தேர்வு
ஜூன் 25ஆம் தேதி : ஆங்கில மொழிப் பாடத் தேர்வு
ஜூன் 26, 27, 28, 29, மற்றும் ஜூலை 1, 3, 4, 5, 6,8,9 ஆகிய நாட்கள் வரை மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications