வழுக்கிய வாரணாசி! பி.எம். கேர்ஸ் + தேர்தல் பத்திரம்.. பாஜக கோட்டை விட்டுடுச்சே! யார் சொல்றது பாருங்க
சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கருத்து கூறியிருக்கிறார்.
ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கை இதுதான்: "உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல்கள்: சுதந்திர இந்தியாவில் நடந்த தேர்தல்களில் இருவேறு கருத்துக்கள் நேரடியாக மோதிக் கொண்ட இந்த தேர்தலில் காந்தியக் கருத்தியலை ஓங்கி முழங்கிய இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு காந்தியத்தை இழிவு செய்து கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான செயல்பாடு மக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்ட பிரதமர் மோடி முஸ்லிம்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தி அவதூறாக பேசியதற்கு தேர்தல் ஆணையம் ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பியது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
-* எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் முகமைகள் வேட்டை நாயாக பாய்ந்தன.
* ஜார்கண்ட் முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் சிறையிடப்பட்டனர்.
* திமுக அரசுக்கு சொல்லன்னா இன்னல்கள் பாஜகவால் தரப்பட்டது.
* காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
* பதிவான மொத்த வாக்குகளை அறிவதற்குக்கூட உச்சநீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது.
தேர்தல் பத்திரங்கள்: அதேநேரம் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகின் இமாலய ஊழலாக பேசப்பட்டது, மோடியின் பி.எம். கேர் ஊழல் உலகின் பெரிய ஊழலாக கருதப்பட்டது.
பணபலம் அதிகார பலம் இவற்றோடு சுயசார்பு ஜனநாயக நிறுவனங்களையும் முடக்கி ஆட்கொண்டு ஊடகங்களை தனது காலடியில் பணிய வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. சம போட்டி இல்லாத சூழலிலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை முன்னிறுத்திய கருத்துகளுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது.
இந்தியா கூட்டணி: இத்தகைய வலிமையோடு இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு தேசத்தைத் தட்டி எழுப்பிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதல் ஐந்து சுற்றில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்ததும், வாரணாசிக்குப் பிறகு இந்துக்களின் இன்னொரு புனிதத் தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் கே. நவாஸ் கனி முன்னிலை வகித்ததும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது. காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன" என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications