பிஎம் கிசான் 24வது தவணை.. ரூ.2000 எப்போது வரும்? பயனாளிகள் இந்த 2 விஷயத்தை செக் பண்ணிட்டீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎம் கிசான் திட்டத்தின் 24-வது தவணை எப்போது வரும், வங்கிக் கணக்கில் எப்போது 2000 ரூபாய் விழும் என்று விவசாயிகள் இப்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் பணம் வரும் தேதியை தெரிந்து கொள்வதைவிட, உங்கள் கணக்குக்கு அந்த ரூ.2,000 வருவதற்கான எல்லா விஷயங்களும் சரியாக இருக்கிறதா என்பதை இப்போதே பார்ப்பதுதான் முக்கியம்..!!

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஒரே நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை., தலா ரூ.2,000 என 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 23 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 24-வது தவணை வர உள்ளது.

PM Kisan

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்

கடந்த 23-வது தவணை ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது.. பிஎம் கிசான் திட்டத்தில் பொதுவாக 4 மாதங்களுக்கு ஒருமுறை தவணை வழங்கப்படுவதால், அடுத்த தவணை அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், 24-வது தவணை எந்த தேதியில் விடுவிக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அக்டோபரில் பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.

எனினும், ஏற்கனவே திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள், அடுத்த தவணை பெறுவதற்கான தங்களது விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரூ.2000 வங்கிக்கணக்கில் எப்போது

அதில் முக்கியமானது e-KYC... இது முடிக்கப்படாமல் இருந்தால் தவணைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஆன்லைனில் OTP மூலம் e-KYC-யை முடிக்க முடியும்.. ஒருவேளை ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் இந்தப் பணியை முடித்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, உங்கள் ஆதார் விவரங்களும் வங்கிக் கணக்கு விவரங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.. வங்கிக் கணக்கில் பெயர் மாறுபாடு, ஆதார் இணைப்பு தொடர்பான பிரச்சினை அல்லது நேரடியாக பணப் பரிமாற்றத்தில் சிக்கல் இருந்தால், தவணைத் தொகை வருவதில் பிரச்சினை ஏற்படலாம்... அதனால் வங்கிக் கணக்கு விவரங்களையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இந்த 2 விஷயம் செக் பண்ணிட்டீங்களா

அனைத்து விவரங்களும் சரியாக இருந்து, அக்கவுண்ட்டில் பணம் வந்ததா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? இதற்காக வங்கிக்கு சென்று லைனில் நிற்க வேண்டிய அவசியமில்லை... வீட்டில் இருந்தபடியே ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக அதிகாரப்பூர்வ PM-KISAN வெப்சைட்டுக்கு சென்று, "Know Your Status" என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அங்கு பதிவு எண்ணை உள்ளிட்டு, ஓடிபி உள்ளிட்ட தேவையான விவரங்களை சமர்ப்பித்தால், தவணைத் தொகையின் நிலை உள்ளிட்ட தகவல்களை பார்க்க முடியும்.

ஒருசிலருக்கு, தாம் பயனாளிகள் லிஸ்ட்டில் இருக்கிறோமா, இல்லையா என்ற குழப்பமும் சந்தேகமும் வரலாம்.. இதையும் ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம். Beneficiary List என்ற பகுதியில் மாநிலம், மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிராமம் போன்ற விவரங்களை தேர்வு செய்து உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

பயனாளிகள் அறிய வேண்டியது

ஒருவேளை e-KYC முடித்திருந்தும், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருந்தும், தவணைத் தொகை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? உடனடியாக PM-KISAN-ன் புகார் வசதி மூலம், இந்த பிரச்சனை குறித்து புகார் கொடுக்க வேண்டியதுதான்.. இந்த புகாரின் நிலையையும் ஆன்லைனிலேயே கண்காணிக்கவும் முடியும்.

அதனால் 24-வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகள், ரூ.2,000 எப்போது வரும்? என்பதை மட்டும் பார்க்காமல், வங்கி கணக்கில் ரூ.2,000 வருவதற்கு தடை இருக்கிறதா? e-KYC முதல் வங்கிக் கணக்கு விவரம் வரை எல்லாமே சரியாக இருக்கிறததா? என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து சரி செய்து கொள்வது நல்லது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+