விவசாயிகள் குஷி.. பட்ஜெட்டில் நிர்மலா "அதை" சொன்னதுமே.. மோடி, அமித்ஷாவுக்கு ஒரே பூரிப்பு.. மீண்டும்?
சென்னை: மீண்டும் பாஜக ஆட்சிதான் என்று இன்று உரக்க சொல்லி உள்ளார் நிர்மலா சீதாராமன்.. நிதியமைச்சரின் இந்த நம்பிக்கை மிகுந்த வரிகளை, அனைத்து அரசியல் கட்சிகளுமே உற்றுநோக்கி வருகின்றன.
பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்றாலே பெரிய அளவில் எந்தவிதமான அறிவிப்பும் இருக்காது... காரணம், அரசின் மிகை செலவுக்கான நிதிநிலை அறிக்கையாகத்தான் இந்த பட்ஜெட்கள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்: பெரும்பாலான இடைக்கால பட்ஜெட்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றன என்றாலும், ஒருசில இடைக்கால பட்ஜெட்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றன..
குறிப்பாக, 2004-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜஸ்வந்த்சிங் நிதியமைச்சராக இருந்தபோதும்சரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் 2009-ல் பிரணாப்முகர்ஜி நிதி அமைச்சராக இருந்தபோதும்சரி, 2014-ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும்சரி, இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு பலன் அளிக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பாஜக சான்ஸ்: அந்தவகையில், இன்றைய இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய திருப்பத்தை தரும் என்றே கணிக்கப்பட்டது.. இதற்கு காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலில் வாக்குகளை அள்ளும் அறிவிப்பை வெளியிட, இந்த இடைக்கால பட்ஜெட் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால், இன்றைய தின அறிவிப்புகளில் அந்த வாய்ப்பை பாஜக நழுவவிடாது என்றும் கணிக்கப்பட்டது.
அதன்படியே, இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.. கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கம் ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொண்டது.. நாட்டின் அனைத்து பிரிவினரின் அனைத்துத் துறை வளர்ச்சியும் நடைபெற்று வருகிறது..
வியாபாரிகள்: நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மிச்சம் அடைந்துள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன" உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார்.
வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துவிட்டார் என்றாலும், விவசாயிகளுக்கான அறிவிப்பும் இன்றைய தினம் பட்ஜெட்டில் பெருத்த கவனத்தை பெற்றுள்ளது.. 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது நாட்டு மக்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது.
வாக்குறுதி: கடந்த எம்பி தேர்தலின்போது, பாஜக அரசு முக்கிய வாக்குறுதி ஒன்றை தந்திருந்தது. அதன்படி, மறுபடியும் தேர்தலில் வெற்றிபெற்றால் விவசாயிகளின் சராசரி வருமானத்தை டபுள் மடங்காக உயர்த்துவதாக வாக்குறுதி தந்திருந்தது.. இந்த வாக்குறுதிதான், விவசாயிகளை கவர்ந்திழுத்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றியும் பெற வைக்க பெரிதும் உதவியது.
கடந்த 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் நிதியைமச்சராக பியூஷ் கோயல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் பி.எம்.கிசான் என்று கூறப்படும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி, அறிவிப்பை, இடைக்கால பட்ஜெட்டாக அறிவித்து, விரிவுபடுத்தியிருந்த நிலையில், பாஜகவுக்கான ஆதரவு மேலும் உயர்ந்தது.
விவசாயிகள்: அந்தவகையில், இன்றைய தினமும் விவசாயிகளுக்கான ஆதரவை பெற, மத்திய பாஜக முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தீவிர காலநிலை மாற்றங்களாலும், பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தாலும், பணவீக்கத்தாலும் விவசாயத்துறை பெரும் சவால்களை சந்தித்து கொண்டிருப்பால், தேர்தலுக்கு முன்பாகவே, விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்களை கொண்டுவரவும் பாஜக அரசு முயலக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களும் கருத்து கூறியிருந்தார்கள்.
அதன்படியே, இன்றைய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், "விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அவ்வப்போது உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் உண்மையான வருமானம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரே பாரதம் வளமான பாரதம் என்ற தாரக மந்திரத்துடன் சவால்களை அரசாங்கம் முறியடித்தது" என்றார்.
வாக்கு சதவீதம்: அதுமட்டுமல்லாமல், 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் அதிரடியாக அறிவித்திருப்பது, விவசாயிகளுக்கான ஆதரவை பாஜகவுக்கு கணிசமாகவே பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.
அதனால்தானோ, நிதியமைச்சர் இன்று தன்னுடைய உரையில், "கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து வெளியேற அரசு உதவியுள்ளது. இதனால் வரும் எம்பி தேர்தலில் மறுபடியும் மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தருவார்கள்.. மறுபடியும் மத்தியில் ஆட்சி அமைக்க தேர்வு செய்வார்கள்" என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சி: நிதியமைச்சர் இப்படி சொன்னதுமே, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.. நிதியமைச்சர் தன்னுடைய உரையில், மொத்தம் 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.. வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே அரசின் நோக்கம் என்றும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பதால், இதை மையமாக வைத்தே பாஜகவின் தேர்தல் அறிக்கைகளும் தயாராகக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு: ஆக மொத்தம், விவசாயிகள் + மகளிர் + இளைஞர்கள் வாக்குகளை மையப்படுத்தியே, பாஜகவின் தேர்தல் காய்நகர்த்தல்கள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications