Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவோட நாட்டுப்பற்றை பார்த்தீங்களா? குலசேகரப்பட்டின ராக்கெட்டில் சீனக் கொடி.. பிரதமர் மோடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா விளம்பரத்தில் சீன நாட்டு ராக்கெட்டை கொடுத்துள்ளார்கள் என திமுக மீது பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெற்ற தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

Pm Modi attacks DMK government for using China flag in Advertisement

இன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

அவர் பேசுகையில் பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. ராமர் கோயிலுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்னு கேட்டார்கள். அயோத்தி ராமர் கோயில் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸும் திமுகவும் நாட்டை பிரிக்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து ஒருவரை நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்திலிருந்து தேர்வு செய்துள்ளோம். தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டணை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த போது அவர் மீது ஒரு கீறல் கூட இல்லாமல் அழைத்து வந்தோம். எந்த நாட்டினர் நம் நாட்டு இந்தியர் மீது கை வைக்க முடியும். என்னை மீறி யாரால் கை வைக்க முடியும்.

மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை திமுக தடுக்கிறது. இது எதற்கு தெரியுமா இந்த நாட்டை கொள்ளையடிக்கத்தான். இதை ஒரு போதும் இந்த மோடி விட மாட்டேன். மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. திமுக பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது.

தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுகவால் வெல்ல முடியாது. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திறப்பு விழாவில் திமுக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில் சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதிலிருந்தே இவர்களின் நாட்டு பற்று நன்றாக தெரிகிறது.

தேசத்தின் ஒற்றுமை எண்ணம் அவர்களுக்கு இல்லை. மொழி, இனம் என மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். எனக்கு தமிழ்மொழி தெரியாது. ஆனால் தமிழக மக்களை நேசிக்கிறேன். வீடு வீடாக சென்று பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். நான் பேசுவது உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ என தெரியவில்லை. ஆனாலும் என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள். என்னை வாழ்த்துங்கள்.

பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்று 3ஆவது முறையாக ஆட்சியை அமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்க வேண்டும். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் குலசேகரப்பட்டினத்தில் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ராக்கெட் ஏவுதளம் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு என்கிறார்கள். இது தற்போது நனவாவதால் திமுக அரசை வாழ்த்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளம்பரத்தை செய்தித் தாள்களுக்கு கொடுத்தார்.

அந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி , முதல்வர் ஸ்டாலினின் படங்கள் பெரியதாகவும் கனிமொழி, உதயநிதியின் படங்கள் சிறியதாகவும் வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்களுக்கு பின்புலத்தில் ராக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது. அங்கு நிறைய ராக்கெட்டுகள் உள்ள நிலையில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ஒரு ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியா ராக்கெட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில் நம் நாட்டு விண்வெளி வீரர்களை அவமதிப்பது போல் சீன நாட்டின் ராக்கெட் போட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+