பீச்சில் பாஜக கொடி.. அண்ணாமலை அந்த பக்கம்.. முருகன் இந்த பக்கம்.. களைகட்டும் மோடி பிறந்தநாள் விழா
பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்
சென்னை: "சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பாதையில் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது... கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தடுப்பூசி
அந்த வகையில், இந்தமுறை மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடியின் பிறந்நாளையொட்டி இன்று 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

பிறந்தநாள்
இன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மோடியின் பிறந்தநாளை "சேவை மற்றும் சமர்ப்பண தினமாக" கொண்டாட முடிவு செய்திருக்கின்றார்கள் பாஜக தொண்டர்கள். அதுமட்டுமல்ல, மோடி தனது அரசியல் பொது வாழ்வில் தலைமை பதவியில் அடியெடுத்துவைத்து இந்த ஆண்டோடு 20 வருடம் நிறைவடைகிறது.. குஜராத் முதல்வராக 13 வருடமும், பிரதமராக 7 வருடமும் என என தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார் மோடி...

நிகழ்ச்சிகள்
இதைதான் விமரிசையாக கொண்டாட, இன்றுமுதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர் பாஜகவினர். 20 வருட அரசியல் பயணத்தை பாராட்டும் வகையில் அக்டோபர் 7ம் தேதிவரை மிகப்பெரிய பிரச்சாரத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.. தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெசன்ட்நகர் பீச்
அதன் ஒருபகுதியாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறும் தூய்மைப்பணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.. எல்.முருகனும் அண்ணாமலையும் இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.. கடற்கரையில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அண்ணாமலை, எல்.முருகன் ஏற்றினர்.

அண்ணாமலை
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியபோது, "பாஜகவுக்கு செப்டம்பர் 17 முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்... இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம்... ஆனால், உண்மையான சமூகநீதியை வழங்கிவரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது.. பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை என்ற அவர், நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவருடைய பிறந்தநாளை அடுத்த 20 நாட்களும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும்" என்றார்..

அர்ப்பணிப்பு
இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளர்.. அதில், "சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பாதையில் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ட்வீட்
மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றதுமே ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், "பாஜகவின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று சபதம் போட்டிருந்தார்.

சபதம்
யாராவது கட்சி தலைவர்கள் புதிதாக பதவியேற்று கொண்டால், தங்கள் கட்சியின் கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு சென்று சேர்க்க பாடுபடுவேன் என்று சொல்வதுதான் வழக்கம்.. ஆனால், தமிழ் மக்கள் மீது மோடி கொண்டுள்ள அன்பை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு போய் சேர்ப்பேன் என்று அண்ணாமலை சபதமாகவே போட்டிருந்தார்.. இப்போது சவால்களை எதிர்கொள்ள மோடி தலைமை உதவுகிறது என்று அதையொட்டிய ட்வீட் பதிவிட்டுள்ளார்.. சவால்களை இவர்கள் வென்று முடிக்கும்வரை, மோடியை பாராட்டும் போக்கும் தொடரும் என்றே கருதப்படுகிறது.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications