மோடியை வாழ்த்தாத அண்ணாமலை.. முதல் ஆளாக புகழ்ந்து பாராட்டிய விஜய்.. கடுப்பான காங்கிரஸ்! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் 17, தந்தை பெரியாருக்கும், பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள்! பாஜகவை பாசிச சக்தி என கடுமையாக எதிர்த்து வரும் திமுக தலைவர் தான் மோடிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். இதனை பார்த்ததும் முதல்வர் விஜய், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதுடன் மோடியின் ஆட்சியை புகழ்ந்தும் செய்தி அனுப்புகிறார்.

அதே சமயம், மோடிக்கு வாழ்த்து சொல்லாத அண்ணாமாலை, பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்து செய்தியை வெளியிடுகிறார். இதில் சில நுண்ணரசியல் இருக்கிறது என்கிறார்கள்.

PM Modi Birthday

விஜய் வெளியிட்ட பிரதமர் மோடிக்கான வாழ்த்து

விஜய் வெளியிட்ட வாழ்த்தில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன். என்று கூறி உள்ளார். விஜய்யின் இந்த வாழ்த்து சர்ச்சையாகி உள்ளது.

இன்னொரு பக்கம்.. பெரியாரை தங்களை ஆகப் பெரிய தலைவராக வரித்துக் கொண்டிருக்கும் திமுக தலைமை, பெரியாரையும் அவரது கோட்ப்பாடுகளையும் ஏற்காத-கடுமையாக விமர்சிக்கிற ஆர்.எஸ்.எஸ்.பின் புலத்தில் இருக்கும் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறது. இது நாகரிக அரசியல் என சொல்லப்பட்டாலும் திமுகவின் உண்மையான உணர்வாளர்கள் - பெரியார் கொள்கைவாதிகள் இதனை ஏற்பதில்லை.

மோடியை புகழ்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள்

அதேபோல, பெரியாரை தங்களின் கொள்கை தலைவராகவும் ஏற்றுக்கொண்டு, பாஜகவை தங்களின் கொள்கை எதிரியாக சொல்லி வரும் முதல்வர் விஜய்யும், மோடியையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்கிறார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். சிந்தாத்தை ஏற்றுக்கொண்ட பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடமிருந்து மோடிக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவரிடமிருந்து வரவில்லை.

வாழ்த்து சொல்லாத அண்ணாமலை - என்ன காரணம்?

மாறாக, பெரியார் பிறந்தநாள் வாழ்த்து அவரிடமிருந்து வருகிறது. அதாவது, மோடிக்கு முதலில் வாழ்த்துகள் சொல்ல வேண்டியவரிடமிருந்து வராததும், மோடிக்கு வாழ்த்து சொல்வதில் ஆர்வம் காட்டாமல் பொறுமையாக சொல்ல வேண்டியவர்களிடமிருந்து உடனடியாக முதலில் வாழ்த்து செய்தி வருவதும் தான் தமிழக அரசியலில் விந்தையாக கவனிக்கப் பட்டுள்ளது.

விஜய் கொடுத்த சூப்பர் சர்டிபிகேட்

இதில் ஒரு சிறப்பு விஷயம் என்னவெனில், மோடிக்கு விஜய் வாழ்த்துக்கள் சொல்வதை கூட அரசியல் நாகரிகத்திற்காக சொல்லப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும், வாழ்த்துச் செய்தியில் மோடியின் ஆட்சிக்கு நற்சான்றிதல் தருகிற வகையில் விஜய்யின் வார்த்தைப் பிரயோகம் இருந்ததை எப்படி எடுத்துக் கொள்வது? என்று காங்கிரஸ் தரப்பில் உற்று கவனிக்கப்படுவது தான்.

காங்கிரஸ் தலைமை சந்தேகம்

விஜய்யின் வாழ்த்துச் செய்தி, விஜய் மீது காங்கிரஸ் தலைமையை சந்தேகப் படவைத்திருக்கிறது என்கிறார்கள். முக்கியமாக ராகுலை விஜய் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருப்பதும்.. இப்போதைய வாழ்த்தும் ஒரே வரிசையில் வைத்து பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், என். டி. ஏ. கூட்டணியில் இருக்கும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினும் விஜய்யும் மோடிக்கு வாழ்த்துகள் சொன்னதை கவனித்து ஆற அமர யோசித்து நீண்ட நேரம் கடந்த பிறகே வாழ்த்துக்கள் செய்தியை மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+