திடீர் தலைசுற்றல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிப்பு
சென்னை: திடீர் தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை வழக்கம்போல் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடனடியாக மனைவி துர்கா ஸ்டாலின், துணைமுதல்வரும் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டது. அதில் லேசான மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பலரும் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் நலம் விசாரித்திருக்கிறார்.
முன்னதாக நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் நலம் விசாரித்த இருந்தனர். சிகிச்சை விவரங்கள் குறித்து பேசியிருந்த அமைச்சர் துரைமுருகன், "முதலமைச்சருக்கு எதுவும் இல்லை. நலமாக இருக்கிறார். இன்று மாலை கூட அவர் வீடு திரும்பலாம்" என்று கூறியிருந்தார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications