உள்ளே புகுந்து அடிக்க போகும் இந்தியா? போர் ஒத்திகையை விடுங்க.. மோடி யாருக்கு போன் போட்டாரு பாருங்க!
டெல்லி: இந்தியா சார்பாக நாளை போர் ஒத்திகை நடத்தப்படும் நிலையில், பிரதமர் மோடி நேற்று முக்கியமான போன் கால் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.
போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரும் பட்சத்தில் விமான வழி தாக்குதல்கள் நடக்கும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் பாகிஸ்தான் விமானம் இந்தியா உள்ளே வரலாம். ஒருவேளை ரேடாரை கடந்து வரும் பட்சத்தில்.. அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இதற்காகவே போர் ஒத்திகைகள் நடக்கின்றன.

மோடி போன் கால்:
இந்தியா சார்பாக நாளை போர் ஒத்திகை நடத்தப்படும் நிலையில், பிரதமர் மோடி நேற்று முக்கியமான போன் கால் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக இந்திய மக்கள் இறந்ததற்கு விளாடிமிர் புடின் மீண்டும் ஒருமுறை தனது மனமார்ந்த இரங்கலை இந்த போன்காலில் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா மேற்கொள்ளும் எந்த விதமான நடவடிக்கைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று புடின் மோடியிடம் உறுதி அளித்தார்.
இதற்கு முன் நடந்த போர்களில் ரஷ்யா இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் இந்தியா இடையிலான கார்கில் போர் அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் செல்ல இருந்த நிலையில் ரஷ்யா இந்தியா கேட்காமலே உதவிக்கு வந்து நின்றது. இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியது. இந்த முறையும் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி உள்ளது.
ரஷ்யாவின் வருகை
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் இருதரப்பு ரீதியாக தீர்த்துக் கொள்ள வேண்டும். போர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் நினைக்க கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய லாவ்ரோவ், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசி உள்ளார்.
1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டு லாகூர் பிரகடனத்தின் விதிகளின்படி, புது டெல்லிக்கு இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும். இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.
இரண்டு நாடுகளும் மோதல்கள் ஏற்பட கூடாது. பிராந்திய அமைதியை நிலைநாட்ட இவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். போர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் நினைக்க கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications