களைகட்டிய மிலாது நபி, ஓணம் பண்டிகைகள்! பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: உலகம் முழுவதும் இன்று ஓணம் பண்டிகை மற்றும் மிலாது நபி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெவித்துள்ளளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, "ஈத் முபாரக்! மிலாது நபி நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பொங்கும் என நம்புகிறேன். கருணை மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கும் மனப்பான்மை எப்போதும் நம்மை வழிநடத்தட்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல முதலமைச்சர் விஜய், "இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!" என மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல, "உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!" என ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
