செங்கல்பட்டில் அரசு பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் பலியான சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே அரசு பேருந்து-லாி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோத அரசு பேருந்து-லாரி மோதி விபத்துக்குள்ளானது.

5 பேர் பலி
இதில் வாகனங்கள் உருக்குலைந்தன. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இன்னொருவரும் பலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6யை தொட்டது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். மற்றவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கியவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இறந்த 6 பேரின் உடல்களும் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இந்த விபத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கனரக வாகனங்களின் உதவியுடன் அரசு பேருந்து, லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ரெிவித்தள்ளார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‛‛செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவி் குணமடைய வேண்டுகிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications