கன்பியூஷன்: புறா வளர்த்தால் நுரையீரல் கேடு! அங்கிட்டு புறா வளர்த்த சென்னை டிரைவருக்கு மோடி பாராட்டு!
சென்னை: சென்னையில் புறா வளர்ப்பால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சம் பரவி வருகிறது. அதே நேரத்தில் புறா வளர்த்து வரும் சென்னை ஆட்டோ ஓட்டுநருக்கு மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகை மீனாவின் கணவர் புறாவின் எச்சங்களால் இதய பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்து. இதேபோல குஜராத் பெண் திம்பல் ஷா, புறா பண்ணைகளை நடத்தி வந்த நிலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சென்னையில் புறா வளர்ப்பு குறித்த ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

புறா வளர்ப்பு ஓட்டுநர்: இந்நிலையில் இன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சென்னையில் புறா வளர்த்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிப் பேசினார். மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நண்பர்களே! தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் அவர்களும் ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார்.
200 புறாக்கள் வளர்ப்பு: தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார். நண்பர்களே, நேரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, மிகவும் சந்தோஷம் உண்டாகிறது. உங்களிடத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்.

30,000 நாக பாம்புகள் மீட்பு: ராஜஸ்தானத்தின் புஷ்கரில் சுக்தேவ் பட், அவருடைய குழுவினரும் இணைந்து வன விலங்குகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்; இவர்களுடைய அணியின் பெயர் என்ன தெரியுமா? இவர்களுடைய அணியின் பெயர் கோப்ரா. ஏன் இந்த ஆபத்தான பெயர் என்றால், இவர்களுடைய அணியானது இந்தப் பகுதியின் பயங்கரமான நாகங்களை மீட்கும் பணியையும் புரிகிறது. இந்த அணியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களை ஒரு முறை தொலைபேசியில் அழைத்தால் போதும், அழைத்த இடத்திற்குச் சென்று விடுகிறார்கள், தங்கள் குறிக்கோளில் இறங்கி விடுகிறார்கள். சுக்தேவ் அவர்களின் இந்த அணியானது இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இந்த முயற்சி காரணமாக மனிதர்களின் அபாயம் நீங்கிய அதே வேளையில், இயற்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியானது பிற நோய்வாய்ப்பட்ட உயிரினங்களுக்கும் சேவை புரியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications