மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 10 பொதுக்கூட்டம்.. வெற்றிக்காக மோடி கடும் முயற்சி
சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகபட்சமாக 10 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
நவம்பர் 28ஆம் தேதி மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தானில் 200 தொகுதிகள் உள்ளன. இங்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இவ்விரு மாநிலங்களிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இவ்விரு மாநிலங்களிலும் தற்போது, பாஜக அரசு நடைபெறுவதால், அதை இழந்துவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ள மோடி, தீவிர பிரச்சாரங்களுக்கு திட்டமிட்டுள்ளார்.
நவம்பர் 25-ம் தேதி, ம.பியில், ஆழ்வார் நகரில் முதல் பேரணி நடத்த உள்ளார் பிரதமர் மோடி. அதே நாளில் விதிஷா மற்றும் ஜபல்பூர் ஆகிய நகரங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு நிறைவு செய்கிறார் மோடி.
அதற்கு மறுநாளே ராஜஸ்தான் வருகை தரும் மோடி, பில்வாரா, பனேஸ்வர் தாம், கோட்டா நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதே நாளில் அதாவது நவம்பர் 26ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ராஜஸ்தானில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.
நவம்பர் 28ஆம் தேதி, மோடி, ராஜஸ்தானின் நாகூர், பரத்பூர் ஆகிய நகரங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள, தெலுங்கானாவில் மூன்று இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அம்மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் ஆட்சியை பிடிப்பது இயலாத காரியம் என்கிறது கள நிலவரம். வருகிற நவம்பர் 27ஆம் தேதி மற்றும் டிசம்பர் 3ஆம் தேதி ஆகிய நாட்களில் தெலுங்கானாவில் மொத்தம் மூன்று இடங்களில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications