‛‛இசை மீது தீரா காதல்’’.. 16 மாடி கட்டடத்துக்காக சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பிரதமர் மோடி!
காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் மியூசிக் கலையரங்கம் கட்டுவதற்காக பிரதமர் மோடி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி சார்பில் நன்கொடையாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மண்மந்திர் எனும் அறக்கட்டளை நாட் பிரம்மா இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியன் மியூசிக் சார்பில் இந்தியாவின் அனைத்து வகையான இசை கலையரங்கம் அமைக்க முடிவு செய்தது.

காந்தி நகர் பகுதியில் 16 அடுக்குகளாக அடுக்குமாடி கட்டடம் வடிவில் இந்த கலையரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நிலம் தேடப்பட்டு வந்தது.
இந்த தகவல் பிரதமர் மோடிக்கு சென்றது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி காந்தி நகரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை இசை கலையரங்கம் அமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். காந்தி நகர் செக்டார் 1ல் பிரதமர் மோடி மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலங்கள் மண்மந்திர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை என்பது இசை மரபுகளை ஊக்குவித்து, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் இசைத்துறையின் அடையாள சின்னமாக காந்திநகரில் பிரமாண்ட 16 அடுக்கு கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு தான் தற்போது நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடிக்கல் நாட்டும் பணி நடந்தது. குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டீல், குஜராத் மாநில பாஜக தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். இந்த கட்டடத்தில் அதிநவீன வசதிகள், இசை கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. நாட்டுப்புற இசை, இந்திய பாரம்பரிய இசை உள்பட அனைத்து வகையான இசைகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தளமாக இந்த கலையரங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications