உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சென்னை: உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தை 1-ந் தேதியும் சித்திரை 1-ந் தேதியும் தமிழ்ப் புத்தாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது; இன்று சித்திரை 1-ந் தேதியை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழர்களுக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.

மோடி தமிழில் வாழ்த்து
பிரதமர் மோடி தமது வாழ்த்தில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அமித்ஷா ஆங்கிலத்தில் தமிழர்களுக்கு புத்தாண்டை வாழ்த்தை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மே.வங்க முதல்வர் மமதா
இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் தமது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் மமதா பானர்ஜி அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications