15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு!

வெறும் 15 பேரை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெறும் 15 பேரை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

முதல் கட்டமாக அவர் கிருஷ்ணகிரியில் பேசினார். அதில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை ராகுல் காந்தி வைத்தார்.

என்ன பேச்சு

என்ன பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் பேசும் போது, வெறும் 15 பேரை வைத்து மோடி ஆட்சி செய்கிறார். அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நீரவ் மோடி, அதானி ஆகியோரை வைத்து ஆட்சி செய்கிறார். இவர்கள்தான் மோடியின் நண்பர்கள். எல்லா பணமும் ஏழைகளுக்கு செல்ல வேண்டும்.

மோடி எப்படி

மோடி எப்படி

ஆனால் இந்த பணம் பணக்காரர்களுக்கு சென்று இருக்கிறது. ஏழைகளுக்கு செல்ல வேண்டிய, தமிழர்களுக்கு செல்ல வேண்டிய இந்த பணம்பணக்காரர்களுக்கு சென்று இருக்கிறது. அவர் அந்த 15 லட்சம் பணத்தை இந்த 15 பேருக்குதான் கொடுத்தார். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மோடி கண்டுகொள்ள கூடவில்லை.

வேலை இல்லை

வேலை இல்லை

தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மோடியால் ஏற்படுத்த முடியாது. பணமதிப்பிழப்பு நீக்கம் இளைஞர்களை நடு ரோட்டில் நிற்க வைத்தது. ஜிஎஸ்டி மொத்தமாக திருப்பூரை அழித்தது, காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தியை அழித்தது, பல இளைஞர்கள் இதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள்

ஜிஎஸ்டி மோசம்

ஜிஎஸ்டி மோசம்

ஜிஎஸ்டி மூலமாக சாதாரண மக்கள் நடு தெருவுக்கு வந்தார்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவார்கள். தமிழக மக்கள் மீண்டும் வாழ்வாதாரம் பெறுவார்கள். திருப்பூர், காஞ்சிபுரம், விவசாயிகள் எல்லோரும் மீண்டும் உயிர்பெறுவார்கள், என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+