சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென்று டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால்.. தமிழகம் வரும் மோடி, அமித் ஷா.. என்ன திட்டம்?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று திடீர் என்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் வரும் மோடி, அமித் ஷா.. என்ன திட்டம்?- வீடியோ

    சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று திடீர் என்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.

    காஷ்மீர் பிரச்சனை காரணமாக தற்போது தேசிய அரசியல் மிகவும் பரபரப்பாக ஆகிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததும் டெல்லி அரசியலை உலுக்கி உள்ளது.

    இந்த நிலையில் சுஷ்மாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லி சென்றார். சுஷ்மாவின் வீட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க இருக்கிறார். இன்று மதியம் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாலை அமித் ஷாவை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

    என்ன கோவில்

    என்ன கோவில்

    தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோவில் நாடு முழுக்க பிரபலமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்வதற்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் அழைக்க இருக்கிறார்.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக அவர்கள் இருவரும் தமிழகத்திற்கு அழைக்கப்பட உள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு பின் இவர்கள் இருவருமே தமிழகம் வரவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கிறது. அதிமுகவில் தலைவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மோடியை தமிழகம் அழைத்து வந்தால் அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை பிறக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் பாஜகவினரும் மகிழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் பிரதமர் மோடி அடுத்த வாரம் இறுதிக்குள் தமிழகம் வர வாய்ப்புள்ளது.

    English summary
    PM Modi may visit Tamilnadu after Governor Banwari Lal's Delhi trip yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X