அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா.. கவிதை நடையில் மோடியை தாக்கிய திருமாவளவன்
சென்னை: பிரதமர் மோடி நேற்று மாலையில் இருந்து குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! என்று கவிதை நடையில் பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே நடக்க இருக்கிறது. நாளை 7 ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது. நேற்று மாலையுடன் அதற்கான தேர்தல் பிரசாரங்களும் ஓய்ந்தது.

இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. லோக்சபா தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக நாட்டில் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரதமர் மோடியும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் இந்தியா கூட்டணி யில் உள்ள கட்சிகளும் பாஜகவை விமர்சித்து வந்தன.
இந்த நிலையில், பிரசாரம் அனைத்தும் ஓய்ந்த நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று கன்னியாக்குமரிக்கு வருகை தந்தார். நேற்று மாலை 6 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கு மாலை 6 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை, சுமார் 45 மணி நேரம் தியானம் செய்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! என்று கவிதை நடையில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
நரேந்திரா ×
நரேந்திரமோடி
அவர் விவேகானந்தா!
இவர் வெறுப்பானந்தா!
அவர் வெறுப்பை உமிழவில்லை!
அதனால்- விவேகானந்தா ஆனார்.
இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு.
அதனால்- 'வெறுப்பானந்தாவாக' வலம் வருகிறார்.
வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்..
எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்
ஒருபோதும் எடுபடாது. இவ்வாறு தொல் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
குமரி வந்த பிரதமர் மோடி, பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். தொடர்ந்து விவேகானந்தர் சிலை அருகே 45 மணிநேர தியானத்தை தொடங்கி உள்ளார். இந்த தியான நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி அருகில் மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு சென்று அங்கு மரியாதை செலுத்த உள்ளார்.
அதன்பிறகு, மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வருகிறார். அங்கிருந்து காரில் ஏறி, அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications