அடுத்த பிரதமர் விஜய்.. மோடி பேசும் போதே பதாகைகள் காட்டிய தவெகவினர்.. பிரதமர் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது "மோடி பேசிக்கொண்டிருந்த போதே, அடுத்த பிரதமர் விஜய்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தவெகவினர் காட்டினர். இதை கவனித்த மோடி எந்த சலனமும் காட்டாமல் தொடர்ந்து உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து தமிழக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வேன். அரசுகள் மாறினாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும், மக்களுக்கு சேவை செய்யும் மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து வருகிறது என்றார்.

PM Modi speaking in Chennai TVK members displayed a banner reading Vijay The Next Prime Minister

அடுத்த பிரதமர் விஜய்

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு தரும் என்று கூறினார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று இருந்தனர். நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, "முதல்வர் விஜய் பெயரை உச்சரித்த போது அங்கிருந்தவர்கள் ஆர்பரித்ததையும் கவனிக்க முடிந்து. இன்னும் ஒரு படி மேலே சென்று சில இளைஞர்கள் தங்கள் கைகளில் அடுத்த பிரதமர் விஜய் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை மோடி முன்பாகவே காட்டினர்.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இதனை மோடியும் கவனித்தார். எனினும் தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தினார். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், பதாகைகளை காட்ட வேண்டாம் என்று இளைஞர்களை அறிவுறுத்தியதையும் பார்க்க முடிந்தது. முன்னதாக மோடி காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். அவரை நேரில் சென்று முதல்வர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டில் இருந்து கார் மூலம் போரூருக்கு சென்றார்.

வழிநெடுக காத்திருந்த ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை மோடி ரோடு ஷோவாக சென்றார். மோடி சென்ற போது, அப்போது ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் மோடி.. மோடி என்று கோஷம் எழுப்பினர். மோடியின் கார் கன்வாய்க்கு பின்னால் மெதுவாக முதல்வர் விஜய்யின் கார் கன்வாய்யும் வந்தது. அப்போது, முதல்வர் விஜய்யை பார்த்ததும் பொதுமக்கள் உறாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

மோடி பேசுவதை உன்னிப்பாக கவனித்த விஜய்

நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து தமிழக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். பிரதமர் மோடி பேசியதாவது:- முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரதமரான பிறகு, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அரசுகள் மாறினாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும், மக்களுக்கு சேவை செய்யும் மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து வருகிறது. அத்தகைய் உறுதிபாட்டுடன் இன்று முதல்வர் ஜோசப் விஜய் உடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்து செல்வோம்" என்று பேசினார். பிரதமர் மோடி இவ்வாறு பேசும் போது மேடையில் இருந்த முதல்வர் விஜய்யும் அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+