யாருகிட்ட வாலாட்டுறீங்க.. துருக்கி நாட்டின் அடிமடியில் கை வைத்த இந்தியா.. மோடியின் அசத்தலான மூவ்!
சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 23 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸில் அவர் விமான நிலையத்தில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிஸால் வரவேற்கப்பட்டார். சர்வதேச அளவில் பல போர்கள் நடக்கும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்திய - சைப்ரஸ் நாடுகளின் ஒப்பந்தங்கள்
இரு நாட்டு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்தும்போது பலதரப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சைப்ரஸ் நாடானது பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான பயணத்தில் முதலாவது நாடாகும். இதனைத் தொடர்ந்து அவர் ஜி7 மாநாட்டிற்காக கனடாவுக்கும், பின்னர் குரோஷியாவுக்கும் செல்கிறார். இதற்கு முன்பு, 2002ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சைப்ரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக சைப்ரஸைத் தேர்ந்தெடுத்திருப்பது, அதன் அண்டை நாடான துருக்கிக்கு ஒரு செய்தியை உணர்த்துவதாக உள்ளது. ஏனெனில், துருக்கி சமீபத்திய போர்களின்போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தது.
துருக்கி பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆயுத உதவி செய்ததோடு அரசியல் ரீதியாகவும் துருக்கி ஆதரவு அளித்தது. சைப்ரஸ், துருக்கியுடன் பிராந்திய எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது. 1974 இல் துருக்கி சைப்ரஸை ஆக்கிரமித்து அதன் வடக்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஒரு பக்கம் இந்தியாவை எதிர்க்கும் நிலையில்.. காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும் அதேபோல் சைப்ரஸ் நெருக்கமானால் ஐரோப்பாவிற்கும் நெருக்கமாக முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சித் தலைவர்
சைப்ரஸ் 2026 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சித் தலைவர் பதவியை வகிக்க உள்ளது. பிரதமரின் இந்த பயணம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை ஆழமாக்க உதவும்.
இன்று பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் மாளிகையில் வரவேற்கப்படுவார். சைப்ரஸிலிருந்து, மோடி இன்று கனடாவுக்கு ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் புறப்படுகிறார். பிரதமரின் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் கடைசி கட்டமாக குரோஷியாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் அதிபர் ஜோரான் மிலானோவிச் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரைச் சந்திக்கிறார்.
23 வருடங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
பாகிஸ்தான் இந்தியா போருக்கு முன்பில் இருந்தே பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இந்தியாவிற்கு எதிராக முக்கியமான கருத்து ஒன்றை கூறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில், பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல. அது நமது சகோதர நாடு. பாகிஸ்தான் உடன் சகோதரத்துவத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம்.
அதன் பிரதமர் ஷாபாஸ் எனக்கு சகோதரர் போன்றவர். பாகிஸ்தான் உடனே இக்கட்டான நேரங்களில் இந்தியா உடன் இருக்கும். பாகிஸ்தான் உடன் நாங்கள் நெருக்கமாக பணிகளை செய்ய விரும்புகிறோம் என்று துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சைப்ரஸ் உடன் இந்தியா நெருக்கமாகி உள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications