யார் வெற்றியோ இல்லையோ.. மோடி கேரண்டி, மத ரீதியான பிரச்சாரம் தோல்வி.. பாஜகவிற்கு பெரும் பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மத ரீதியாக பிரச்சாரங்களை செய்தது தோல்வி அடைந்துள்ளது. அதோடு அவரின் மோடி கேரண்டி என்ற முழக்கமும் தோல்வி அடைந்து உள்ளது.

2024 லோக்சபா தேர்தல் பல வித்தியாசமான விஷயங்களை கண்டது. மசூதி நோக்கி அம்புகளை வீசுவது போன்ற குறியீடு தொடங்கி கண்ணீர்விட்டபடி வாக்கு கேட்பது வரை பல விஷயங்களை கண்டது. ஆனால் அதை எல்லாம் மீறிய ஒரு விஷயம்.. பிரதமர் மோடியின் மத ரீதியிலான பிரச்சாரம்தான்.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress

2024 லோக்சபா தேர்தலில் கடந்த 4 வாரமாக இஸ்லாமியர்களை தாக்கி மோடி பேசி வந்தார். ஊடுருவல்காரர்கள் என்பது தொடங்கி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது வரை பல விஷயங்களை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

என்ன சொன்னார்: நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசினார்.

இதை தாண்டி பல கடுமையான வார்த்தைகளை அவர் தனது பிரச்சாரங்களில் பயன்படுத்தினார். உதாரணமாக தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் உள்ளூர் பிரச்சனை, முதலீடுகள், ஜிஎஸ்டி, கச்சத்தீவு, டோல் கேட், நீட், ரயில்வே பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று ஆக்கபூர்வமான விஷயங்களை மையப்படுத்தியே பிரச்சாரம் நடந்தது. தமிழ்நாட்டில் மத ரீதியாக பிரச்சனை நடக்கவில்லை.

பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி எங்கும் மதம் பற்றி பேசவே இல்லை. ஆனால் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சனைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விஷயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.

சர்ச்சை: ஆனால் அவரின் பேச்சுக்கள் எதுவும் வடஇந்தியாவில் எடுபடவில்லை. அவரின் மத ரீதியான பேச்சுக்கு உத்தர பிரதேசத்திலேயே மக்கள் பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. 40 இடங்களில் அங்கே இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அங்கேயே மக்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை.

மோடி கேரண்டி பிரச்சாரம்; அதேபோல் மோடி கேரண்டி பிரச்சாரமும் தோல்வி அடைந்துள்ளது. 2004 லோக்சபா தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட என்டிஏ கூட்டணி இந்தியா ஒளிரும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. டிவி தொடங்கி தெரு பிரச்சாரம் வரை இந்தியா ஒளிரும் என்ற "ஹஸ்கி" குரலில் ஒரு பிரச்சாரம் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்தியா ஒளிரும் பிரச்சாரம் பாஜகவின் டிரேட் மார்க் பிரச்சாரமாக இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் இதுதான் இருந்தது. அப்போது தேர்தலை கணித்த பல கணிப்பாளர்கள் மீண்டும் வாஜ்பாய் வருவார் என்றே கூறி இருந்தனர்.

பல தேர்தல் கணிப்பாளர்கள் வாஜ்பாய் அலை இருக்கிறது என்றுதான் கணிப்புகளை கூறி இருந்தனர். பலரும் பாஜக அலை இருப்பதாகவே தேசிய அளவில் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது.

பாஜக 138 இடங்களை வென்றது. சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இப்போது "இந்தியா ஒளிரும்" பிரச்சாரம் போல மீண்டும் "மோடி கேரண்டி" பிரச்சாரம் அவர்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் 2004 தேர்தல் போல மாறி பாஜக தனியாக மெஜாரிட்டி பெற முடியாமல் தோல்வி அடைந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+