இணையுமா "தலைகள்".. 7ம் தேதி "இவர்" வருகிறார்.. ஒரு வாரம் விட்டு "அவர்" வருகிறார்.. செம அதிரடி..!
பிரதமர் தமிழகம் வரும்போது பல பிரச்சனைகளுக்கு முடிவு தெரியும் என்கிறார்கள்
சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையானது, மிகப்பெரிய மாற்றத்தை அரசியலில் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தமுறை நடக்க போகும் சட்டசபை தேர்தலானது, திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.. அந்தவகையில், வரும் 14ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்...

பிரதமர் மோடி
ஆனால் இந்த வருகை, வேறு சில தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், முக்கியமாக அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இப்போதைய ஹாட் டாப்பிக் சசிகலாதான்.. சசிகலா ரிலீஸ் ஆவதற்கு முன்பிருந்தும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றதில் இருந்தும்கூட சில கேள்விகளுக்கு இன்னமும் விடையே கிடைக்காமல் உள்ளது..

அமித்ஷா
சசிகலாவின் வருகையை ஏற்றுக் கொள்ளும்படி, அமித்ஷா தரப்பு முதல்வர் எடப்பாடியாரிடம் எடுத்து சொல்லியும், அதை முதல்வர் இப்போதுவரை ஏற்க மறுத்து வருவதாக தெரிகிறது.. பிரதமரை சந்தித்து விட்டு வந்த கையோடு, சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று ஏன் உறுதியுடன் சொன்னார் என்பது தெரியவில்லை.

எதிர்ப்பு
இதற்கு பிறகு, சசிகலா உடல்நலம் தேறி வர, ஓபிஎஸ் மகன் விடுத்த வாழ்த்து செய்திக்கு, ஓபிஎஸ் இதுவரை எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை... சசிகலா ரிலீஸ் ஆகி செல்லும்போது, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் கிளம்பி சென்றபோது, ஜெயக்குமாரும், சிவி சண்முகமும்தான் அலறினார்களே தவிர, ஓபிஎஸ் ஏன் வாய் திறக்கவில்லை என்பதும் தெரியவில்லை.

ஜெயக்குமார்
ஓபிஎஸ் மட்டுமல்ல, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியாரும் வாய் திறக்காதது ஏன் என்று தெரியவில்லை.. ஜெயக்குமார் சொல்வது போல, கட்சி கொடியை பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்றால், கட்சிக்கென்று ஐடி விங், சட்டப்பிரிவு போன்றவை தனித்தனியாக வக்கீல்கள் இருக்கும் பட்சத்தில், இதுவரை ஒரு வழக்கு கூட சசிகலா மீது பதிவு செய்யவில்லையே ஏன் என்று தெரியவில்லை. சேலத்தில்தான் தற்போது சிலர் புகார் கொடுத்துள்ளனர்.

விளம்பரம்
சசிகலா ரிலீஸ் ஆனபோது, ஓபிஎஸ் தந்த விளம்பரம் ஏன்? அதிலும் முதல்வர் வேட்பாளர் அறிவித்து ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வரும்போது, ஓபிஎஸ் இப்படி தனி விளம்பரங்களை பதிவிடுவது ஏன்? இந்த தைரியத்தை அவருக்கு வழங்கியது யார்? என்பதும் தெரியவில்லை. இத்தனை கேள்விகளுக்கும் மோடியின் வருகையே அதற்கான பதிலாக இருக்கும் என்று தெரிகிறது...

ஸ்டாலின்
இதற்கெல்லாம் ஒரே காரணம் முக ஸ்டாலின்தான்.. தமிழக தேர்தலில் திமுகவுக்கு போட்டியாக அதிமுகதான் இருக்கும் என்ற சூழ்நிலையில், அந்த அதிமுகவே வலுவிழந்து போய் வருவதால், இப்போது ஒரு அதிரடி தேவைப்படுகிறது.. கட்சியை பலப்படுத்தவும், திமுகவை வீழ்த்தவும் அதிமுகவின் ஒற்றுமை தேவைப்படுகிறது.. அது சசிகலாவால் மட்டுமே முடியும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.. அதனால், இந்த 14-ம் தேதி தொடக்க விழாவையும் தாண்டி, மோடியின் வருகை பல்வேறு விதமான அதிரடியை கிளப்ப போகிறது என்பது மட்டும் நிச்சயம்..!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications