PM Modi Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
சென்னை: தைப்பூச திருநாளுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து (PM Modi Thaipusam Wishes in Tamil) தெரிவித்துள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும் என்றும், எல்லாருக்கும் நல்ல ஆரோக்கியம், வெற்றி கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.
தைப்பூச தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைப்பூசம் திருநாள் கொண்டாட்டம்
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், சிறுவாபுரி, கந்தக்கோட்டம் உள்ளிட்ட முக்கியமான முருகன் கோயில்களில் தைப்பூசம் களைகட்டியது.
இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழக்கமான நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று தைப்பூசம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பாதயாத்திரையாக தொலை தூரங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்துருக்கு வருகை தந்தனர்.
பாத யாத்திரையாக வந்து வழிபாடு
நெல்லை, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக திருச்செந்தூர் வந்து முருகனை வழிபட்டனர். கடவுள் முருகர் சூரபத்மனை அழித்து, தீமைகளை வென்றதைக் குறிக்கும் விதமாக, தை மாதம் வரும் பவுர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமான் தனது அன்னை பார்வதியிடம் இருந்து ஞானவேல் வாங்கிய தினம் ஆகும். அதுமட்டும் இன்றி சிவபெருமான் உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்த திருநாளாகவும், முருகனுக்குக் காவடி நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு நாளாகவும் தைப்பூசம் நாள் போற்றப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
இத்தகைய சிறப்புமிக்க நாளில் முருகப்பெருமைனை வழிபட்டால் தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் முருகப் பெருமானை பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தைப்பூச திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார். மோடி கூறியிருப்பதாவது:-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications