தமிழகம் வரும் பிரதமர் மோடி? நயினார் போடும் பிரம்மாண்ட பிளான்.. அரசியல் களம் மொத்தமாக மாறுதே
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மார்ச்- ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயண நிறைவு விழாவில் அவர் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. அனைத்துக் கட்சிகளுமே ஒரு பக்கம் கூட்டணியை இறுதி செய்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. எல்லாக் கட்சிகளும் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு தேர்தல்
பாஜகவைப் பொறுத்தவரை இப்போது அவர்கள் தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணியில் இருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதமே அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளுக்கும் நேரில் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் பாஜக தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். முதற்கட்டச் சுற்றுப்பயணம் கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் தொடங்கியது. இது நவம்பர் 22ம் தேதி தூத்துக்குடியில் முடிந்த நிலையில், அடுத்து தேனியில் இரண்டாம் கட்டம் ஆரம்பித்தது.
பிரதமர் மோடி தமிழகம் வருகை?
மாநிலம் முழுக்க நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார். இதன் நிறைவு விழா வரும் ஜனவரி மாதம் 2வது வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்த நிகழ்வில் பங்கேற்கப் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் 2ம் வாரம் புதுக்கோட்டைக்குப் பிரதமர் மோடி வருவதாகச் சொல்லப்படுகிறது. அங்கு நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயண நிறைவு விழா நடக்கும் நிலையில், அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
தேசிய தலைவர்கள்
தமிழ்நாட்டுத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய தலைவர்கள் பார்வை இங்கு திரும்பியுள்ளது. முன்பு 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பும் கூட பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சில மாதங்களில் அடுத்தடுத்து பல முறை தமிழகம் வருகை தந்திருந்தனர். அதேபோல இந்த முறையும் தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகம் வருவது உறுதி!
அரசியல் களம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணி வழக்கம் போல உள்ளன. இது தவிர இவ்வாண்டு தேர்தல் களத்தில் தவெகவும் புதிதாகக் களத்திற்கு வந்துள்ளன. இது தவிர நாம் தமிழர் கட்சியும் இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது. 4 முனைப் போட்டியால் வாக்குகள் சிதறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருக்கிறது. மற்ற கட்சிகளைக் கூட்டி வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும், ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோரையும் இந்தக் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரமாக முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!











Click it and Unblock the Notifications