வரும் 14ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சென்னை: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
Recommended Video

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும்.

வரும் 14ஆம் தேதி சென்னை வரும் பிரதமர், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, விம்கோ நகர் - வண்ணாரப் பேட்டை மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதேபோல காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இது தவிர மேலும் பல்வேறு திட்டங்களையும் பிரமதர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளார். முன்னதாக, டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றே பிரதமர் தற்போது தமிழகத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications