நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு தேசியக்கொடி.. சமூக வலைத்தள முகப்பில் வைக்க மோடி வேண்டுகோள்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். "நமது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டுக்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம் என்று ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவைக் காண சிறப்பு விருந்தினர்களாக 1,700 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றி வைத்து உரையாற்றுவார்.
கடந்த மாத இறுதியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வீடுகள் தோறும் தேசிய கொடி' என்ற இயக்கத்தின் கீழ் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அத்துடன் 'என் மண், என் தேசம்' என்ற இயக்கத்தின் கீழ் அவரவர் பகுதியில் தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி 'செல்பி' படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டும் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றியுள்ளார். மேலும் 'வீடுகள் தோறும் தேசிய கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களும் தங்களது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், "வீடுகள் தோறும் தேசிய கொடி இயக்கத்தின் உணர்வோடு, நமது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டுக்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications