ஜல்லிக்கட்டு: ஆரம்பம் முதலே உறுதுணையாக நின்றவர் பிரதமர் மோடி மட்டுமே: தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு
சென்னை : "ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் இன்று வரை நின்றவர் பிரதமர்
நரேந்திர மோடி மட்டுமே. தமிழகத்தின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்காக தனது விடாப்பிடியான முயற்சிக்காக மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் பிரசித்தி பெற்றவை. பல மாவட்டங்களில் கோவில் விழாக்களின் போதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பீட்டா போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை ஏற்பட்டது.
இதை கண்டித்து இளைஞர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் கடந்த 2017ஆம் ஆண்டு லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்து கொடுத்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் உரிய விதிமுறைகளை பின்பற்றி, போலீசாரின் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று அறிவித்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றியது என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம், ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை ஏற்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு பிரச்சனையில் முதலில் இருந்தே நமக்கு உறுதுணையாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே; ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க தொடர்ச்சியாக முயற்சித்த, பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ் கூட்டணி அரசின் முன்னாள் சுற்றுச்சூழல் துரை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை அறிமுகப்படுத்தினார். பின்னர் 2014 மே மாதம் ஜல்லிக்கட்டு மீதான தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தபோது, ஜெய்ராம் ரமேஷ் அந்த தீர்ப்பை வரவேற்று, காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்தது என்றார்.
2015 டிசம்பரில், முன்னாள் பிரதமரும், அப்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான மன்மோகன் சிங், மனிதநேய சங்கத்தின் கடிதத்திற்கு பதிலளித்து, ஜல்லிக்கட்டுக்கு எதிராக அழைப்பு விடுத்தார். 2016 ஜனவரியில், நமது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், சுப்ரீம் கோர்ட், அரசின் ஆணைக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர சட்டத்தை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டார். அதன்படி ஜனவரி 2017ல் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது.
மே 2016 இல், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் மீது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பையே காங்கிரஸ் கட்சியின் இச்செயல் காட்டுகிறது.

2022 டிசம்பரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்குத் தேவையான ஆவணங்கள் அளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர்.சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக விசிகே தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியாலும், கூட்டணி கட்சிகளாலும் தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.
ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதல் இன்று வரை நின்ற ஒருவர் நமது பிரதமர்
நரேந்திர மோடி மட்டுமே. தமிழகத்தின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்காக தனது விடாப்பிடியான முயற்சிக்காக நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications