ஒரே மாதத்தில் 2-வது முறை! மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?
சென்னை: சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூரில் பாஜக சார்பில் நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர்.

சிவி ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது" என்று பேசினார். இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் கேலா இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.
பிரதமர் மோடி வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்கிறார்.
திருப்பூரில் பாஜக சார்பில் நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வருகை தர உள்ளது பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications