தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்த நாள்- பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்த நாள். தமது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது உருவபடத்துக்கும் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்தினார். இதற்கு தங்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன் என பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார் என்கின்றன திமுக வட்டாரங்கள்.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications