‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடித்ததில், ‛‛நீங்கள் தான் என் சொத்து. மதிப்பமிக்க பதவியை உதறிவிட்டு மக்களுக்காக சேவையாற்ற வந்ததில் மகிழ்ச்சி. கட்டாயம் கோவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்'' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த முதற்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் தான் முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தனித்தனியே பிரதமர் மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்தத்தில் பிரதமர் மோடி, ‛‛என் அருமையான காரியகர்த்தாக்களே. இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வைத்து கொள்வார்கள். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக அனைவருக்கம் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்பது இந்த தேர்தல் மூலம் தொடரும்.
இந்த தேர்தல் என்பது நமது பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்கும் பாலமாகும். பாஜக பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக்கி செல்லும். அதுமட்டுமின்றி 2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் தொடங்கும் முன்பே அனைவரும் வாக்களிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தனித்தனியே பிரதமர் மோடி எழுதிய கடித்ததில் அவர்கள் பற்றிய சில தனிப்பட்ட விஷயங்களை கூறி பாராட்டி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து கூறியுள்ளார். குறிப்பாக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், ‛‛மதிப்புமிக்க பணியை (ஐபிஎஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவையாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு முழவதம் பாஜகவினர் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தியதிலும், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்டவற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காற்று உள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும். கோவை மக்களின் ஆசிர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்றவர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதையும் விட்டு கொடுக்க மாட்டோம்'' என புகழ்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications