டெல்லியில் இருந்து.. ஸ்டாலினுக்கு பறந்து வந்த வாழ்த்து.. பிரதமர் மோடி உள்பட அணிவகுக்கும் தலைவர்கள்!
முதல்வர் ஸ்டாலின் இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகள் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து பறந்து வந்துள்ளது.
பிரதமர் மோடியை போல் ஆளுநர் ஆர்என் ரவி, தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட ஏராளமானவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். காலையிலேயே அவர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று மரியாதை வாங்கினார். மேலும் கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மையாரிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இதையடுத்து ஸ்டாலினுக்கு தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‛‛70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து
அதேபோல் தேமுதிக நிறுவன தலைவரான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று 70வது பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர், திமுக தலைவர், அன்பு சகோதரர் முக ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர்கள் வாழ்த்து
மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ், ‛‛தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆம் பிறந்தநாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். பாமக தலைவர் ராமதாஸ், ‛‛இன்று 70ம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி முக ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications