“ஆரம்பிக்கலாமா?” தமிழில் பேசிய பிரதமர் மோடி.. தமிழ்நாட்டில் சில காலம் பதுங்கி வாழ்ந்துள்ளாராம்!
சென்னை: "ஆரம்பிக்கலாமா?" என தமிழில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின்போது சில வார்த்தைகள் தமிழில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலின்போதே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். வேட்டி சட்டையோடு தமிழ் பாரம்பரிய உடையில் இந்த பேட்டியை அளித்துள்ளார் பிரதமர் மோடி.

தனியார் தொலைக்காட்சி சார்பாக, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட நேர்காணல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேசுவது தமிழில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நேர்காணலில் தமிழ்நாடு உடனான தனது அனுபவம் பற்றியும், பல்வேறு அரசியல் கேள்விகள் தொடர்பாகவும் பதில் அளித்துள்ளார் பிரதமர் மோடி.
தமிழில் பேசிய மோடி: இந்த பேட்டியின்போது சில வார்த்தைகள் தமிழிலும் பேசியுள்ளார் பிரதமர் மோடி. "ஆரம்பிக்கலாமா?" என தமிழில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. மேலும், தமிழில் வணக்கம் என தெரிவித்ததோடு, "எப்படி இருக்கீங்க?" என நேர்காணல் செய்பவர் எழுப்பிய கேள்விக்கு "நல்லா இருக்கேன்" என தமிழிலேயே பதில் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
வேஷ்டியில் ஜம்மென்று இருக்கிறீர்களே என பிரதமர் மோடியை பார்த்து நேர்கண்டவர் கூறியதற்கு, "இதை கவனித்து பேசியதை பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் மோடி.
அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன்: மேலும், தமிழ்நாட்டுக்கு உங்களின் முதல் பயணம் நினைவிருக்கிறதா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறேன். நாடெங்கும் சுற்றும் ஆர்வத்தில் எல்லா மாநிலங்களுக்கும் சென்றபோது தமிழ்நாட்டுக்கும் அடிக்கடி வந்திருக்கிறேன்.
அண்டர்கிரவுண்ட் வொர்க்: கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது கன்னியாகுமரி உட்பட பல இடங்களுக்கு வந்திருக்கிறேன். விவேகானந்தர் பாறையில் கட்டுமான பணிகள் நடக்கும்போது நான் அங்கு வந்திருக்கிறேன். முக்கியமாக, 1975ல் இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜென்சி கொண்டு வந்தபோது நான் தலைமறைவாக அண்டர் கிரவுண்டில் இருந்து வேலை செய்ய வேண்டியிருந்த காலம்.
கட்சி சார்ந்த சில ஒருங்கிணைப்பு பணிகளுக்காக பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கிறேன். எமெர்ஜென்சி முடிந்த பிறகு, அந்த நேரத்தில் மக்கள் நடத்திய போராட்டங்கள், எதிர்ப்புகளை தொகுக்க ஒரு முடிவு செய்திருந்தோம். இதற்காக நாடு முழுவதும் பயணித்து பல தலைவர்களை சந்தித்தேன். அந்த வேலைக்காக தமிழ்நாட்டில் பல நாட்கள் தங்கி இருந்து உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications