இன்ச் கூட நகர முடியாது.. சென்னையில் இன்று இந்த ஏரியா பக்கம் போகாதீங்க.. மோடி வருகையால் கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து பல இடங்களில் முடக்கப்பட்ட உள்ளது. பல இடங்களுக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

PM Narendra Modi trips in Tamil Nadu Many roads will closed today in Chennai

லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. சென்னை தியாகராயர் நகரில் வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்திற்காக 6வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் அவர், சென்னை, வேலூர், நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

போக்குவரத்து மாற்றம்: சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இன்று செய்யப்படும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி 09.04.2024 அன்று மாலை 1800 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு. 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் 15.00 மணி முதல் 20.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 15.00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும். தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) 14.00 மணி முதல் 21.00 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாறை நோக்கி செல்லும் வாகனங்கள்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள். வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள். கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள். CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.

ஆகியவை திசை மாற்றப்படும் என்பதால் பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு செல்ல வேண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+